அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு ஒரு நற்செய்தியை தந்திருக்கிறார். இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைத்து முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது இந்தியாவில் ஜவுளி உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி, நகை மற்றும் நவரத்தினங்கள் உற்பத்தி என ஏற்றுமதி துறை சார்ந்த இயங்கக்கூடிய பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு , கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்த 50 சதவீத வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது.

இந்த சூழலில் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க வேண்டும் என டிரம்ப் கூறினார். இந்தியாவும் படிப்படியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்டது. இது ஒருபுறம் இருக்க இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தையும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 50 சதவீத வரிவிதிப்பை குறைக்கவும், இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதை சமூக வலைதளத்தில் அறிவித்திருக்கும் டிரம்ப் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது என கூறி இருக்கிறார். எனவே இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பை 18 சதவீதமாக குறைக்கிறோம் என அறிவித்துள்ளார். அது மட்டும் இன்றி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25% வரி முற்றிலும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இந்தியா இடையேயான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கர் அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியும் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். 140 கோடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியா அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்க கூடிய இந்த ஒப்பந்தத்திற்கு தொழிலதிபர்கள், சந்தை நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள் பெரிய வரவேற்பை தெரிவித்துள்ளனர். இது வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி என குறிப்பிட்டுள்ளனர். இதனால் இருதரப்பு பொருளாதார உறவுகள் ஊக்கம் பெறும் என்றும் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை வலுப்படும் என்றும் தொழில்துறையினர் கூறுகின்றனர். பங்குச்சந்தையை பொறுத்தவரை இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பங்குச்சந்தை மீண்டு வருவதற்கு மிகச்சிறந்த ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருப்பதாக முதலீட்டு துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

குஜராத்-க்கு அடித்தது யோகம்.. செமிகண்டக்டர் சிற் உற்பத்தியில் அடியெடுத்து வைக்கும் கேன்ஸ் டெக்னாலஜி..!!

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications