அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமுக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் வெனிசுலா, கிரீன்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் பகுதியாகக் காட்டும் ஏஐ வரைபடத்தை பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே வெனிசுலாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள வேளையில், கடந்த வாரம் அந்நாட்டின் தற்காலிக அதிபர் என்ற ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்தார். இதை தொடர்ந்து கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தீவிரமாக முயற்சி செய்து வரும் வேளையில், புதிய ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைபடத்தில் ஓவல் ஆபிஸில் டிரம்ப் அமர்ந்துக்கொண்டு, NATO தலைவர்களான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஐரோப்பிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் ஆகியோருடன் பேசிகொண்டு இருப்பது போல் உருவாகப்பட்டு உள்ளது. இவர்களுக்கு பின்னால் அமெரிக்காவின் புதிய வரைப்படம் உள்ளது இதில் வெனிசுலா, கிரீன்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் பகுதியாகக் காட்டப்பட்டு உள்ளது.
மற்றொரு பதிவில் டிரம்ப், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவுடன் கிரீன்லாந்தில் அமெரிக்க கொடியை ஏற்றுவது போன்ற படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் "கிரீன்லாந்து, அமெரிக்க பிரதேசம், EST. 2026" என்ற போர்டும் உள்ளது. இந்த புகைப்படத்தையும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது.

கிரீன்லாந்தின் நாட்டை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம் என்றும், அமெரிக்காவுக்கான கனிம வளங்கள் தேவை காரணமாக அவசியம் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதனால் கிரீன்லாந்து நாட்டை கைப்பற்றுவது மிகவும் அவசியமாக உள்ளதாக தொடர்ந்து பேசி வருகிறார்.
மேலும் கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் ரஷ்யா அல்லது சீனா அதை ஆக்கிரமிக்கும் என்று எச்சரித்துள்ளார். தற்போது அப்பகுதியில் ரஷ்ய மற்றும் சீன கப்பல்கள் நிறைந்துள்ளன என்றும், கிரீன்லாந்தின் பாதுகாப்பு இவர்களின் கட்டுப்பாட்டிற்கு கீழ் பெரும் கேள்வியாக உள்ளது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
இதேபோல் டிரம்ப் 2வது முறையாக அதிபரான நாளில் இருந்து கனடா குறித்து டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். கனடா அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற வேண்டும் என்று டிரம்ப் பலமுறை பேசியுள்ளார். அமெரிக்கா கனடாவுக்கு ஆண்டுக்கு $200 பில்லியன் வர்த்தக நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த தொகை இல்லையெனில் கனடா சுதந்திர நாடாக தொடர முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த பதிவுகள் டிரம்ப்பின் கிரீன்லாந்து தொடர்பான அச்சுறுத்தல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. ஐரோப்பிய நாடுகளுடனான உறவில் பதற்றம் அதிகரித்துள்ள இந்த வேளையில் NATO தலைவர்கள் உடன் பேசுவது போல் வெளியான புகைப்படம் புதிய பதற்றத்தை ஐரோப்பாவில் உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications