அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக பொருளாதார அமைப்பு (WEF) நடத்திய கூட்டத்தில் புதன்கிழமை கலந்துக்கொண்டு பேசிய போது, கிரீன்லாந்தை "ஐஸ்லாந்து" என்று தவறாக குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 79 வயதான டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற தனது திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில், உலகளாவிய இக்கூட்டத்தில் பேசும் போது பல இடங்களில் கிரீன்லாந்தை ஐஸ்லாந்து என்று தவறாக குறிப்பிட்டு உள்ளார்.

டிரம்ப் தனது உரையின் போது "ஐஸ்லாந்து" என்று குறிப்பிட்டு, NATO நட்பு நாடுகள் அமெரிக்காவுக்கு உதவாது என்று விமர்சித்தார். "நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். ஐஸ்லாந்து விஷயத்தில் NATO நம்முடன் இல்லை" என்று கூறினார். மேலும் "ஐரோப்பிய பங்குச் சந்தை நேற்று ஐஸ்லாந்து காரணமாக சரிந்தது" என்றும் தவறாக குறிப்பிட்டார்.
கிரீன்லாந்து டென்மார்க்கின் கீழ் இருக்கும் ஒரு பகுதி, ஐஸ்லாந்து அதற்கு 200 மைல் தொலைவில் உள்ள தனி நாடு. டிரம்ப் இந்த இரண்டு நாடுகளை குழப்பியது சமூக ஊடகங்களில் பெரும் கேளிக்க உள்ளாகியுள்ளது. X தளத்தில் "ஐஸ்லாந்து" ட்ரெண்டாகியது. பலர் டிரம்ப்-ஐ மீம்ஸ் வைத்து கலாய்த்தும், நகைச்சுவை பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
டிரம்ப் அமெரிக்காவை சீனா, ரஷ்யா தாக்குதலில் இருந்து பாதுகாக்க கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். இதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என பேசி வந்த டிரம்ப் WEF கூட்டத்தில் ராணுவம் வைத்து வலுக்கட்டாயமாக கைப்பற்ற மாட்டேன் என்று உறுதியளித்தார். ஆனால் ஐரோப்பிய நாடுகள் உடன் உருவான பதற்றம் குறைந்துள்ளது.
ஆனாலும் இணையத்தில் தற்போது டிரம்ப் கிரீன்லாந்தை ஐஸ்லாந்து என பேசியது வைரலானது.


Click it and Unblock the Notifications