புடினிடம் கெஞ்சும் டிரம்ப்.. அமெரிக்காவில் நிலைமை ரொம்ப மோசம்!

அமெரிக்காவின் சரக்கு போக்குவரத்து அனைத்தும் சாலை வழியாகவும், டிரக் வாயிலாகவும் மட்டுமே நடக்கும் வேளையில் டீசல் விலை உயர்வு என்பது அந்நாட்டின் விலைவாசியைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் போர் தாக்குதல் துவங்கியதில் இருந்து அமெரிக்காவில் டீசல் விலை சுமார் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை சமாளிக்க டிரம்ப் அரசு அவசர கால சேமிப்பை வெளியே கொண்டு வந்தது, இதுமட்டும் அல்லாமல் வரியையும் குறைத்தது. ஆனால் டீசல் விலை உயர்வு கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து தற்போது ஒரு கேலென் 6.28 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

புடினிடம் கெஞ்சும் டிரம்ப்.. அமெரிக்காவில் நிலைமை ரொம்ப மோசம்!

இதனால் அந்நாட்டின் ஒட்டுமொத்த போக்குவரத்து செலவுகளும் பெரியளவில் அதிகரித்து வருகிறது, அமெரிக்காவின் டீசல் தட்டுப்பாட்டைத் தீர்த்து வந்த வளைகுடாவில் போர் அச்சம் அதிகரித்துள்ளது, வெனிசுலா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் திறன் அமெரிக்காவில்லை இல்லாத காரணத்தால் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியும் பயன் இல்லாமல் உள்ளது.

Also Read

இந்த நிலையில் டிரம்ப் ரஷ்யாவின் புடின் உதவியைக் கேட்டுள்ளார். சமீபத்தில் உக்ரைன் ரஷ்ய எண்ணெய் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்து வரும் வேளையில் ரஷ்ய அரசு டீசல் ஏற்றுமதி மீது தடை விதித்திருக்கிறது. இதேவேளையில் தான் ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை டிரம்ப் - புடின் உடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மிகவும் சிக்கலான இந்த பேச்சுவார்த்தை இரு நாட்டுத் தலைவர்களும் சுமுகமாக எதிர்கொண்ட நிலையில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இப்பேச்சுவார்த்தை முக்கிய திருப்பு முனையாக அமைந்தது என்றால் மிகையில்லை.

Recommended For You

டிரம்ப் - புடின் பேச்சுவார்த்தை முடிந்த உடன் சனிக்கிழமை ரஷ்ய அரசு டீசல் ஏற்றுமதி மீது போடப்பட்ட தடையைத் தளர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த 5 வருடங்களாக அமெரிக்காவுக்கு எதிர் முனையில் நின்று இருந்த ரஷ்யா உதவ உள்ளது, இதன் மூலம் ரஷ்யா இனி அமெரிக்காவுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.

இதுகுறித்து ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் கூறுகையில், தற்போது ரஷ்யாவின் டீசல் உற்பத்தி அளவு உள்நாட்டு தேவையை முழுமையாகத் தீர்க்கும் வகையிலும், வெளிநாட்டுக்கு போதுமான அளவு ஏற்றுமதி செய்யும் அளவில் உள்ளது. இதனால் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதாக அறிக்கையில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், புடின் உடனான பேச்சுவார்த்தையில், ரஷ்ய அரசு உடனடியாக 3 லட்சம் டன் டீசல் அமெரிக்காவுக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் நவம்பர் மாதத்தில் 5 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து 1 லட்சம் டன் சந்தைக்குக் கொண்டு வர ரஷ்ய அரசு உத்தகவாதம் கொடுத்துள்ளதாக டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+