அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் JPMorgan Chase வங்கி மற்றும் அதன் CEO ஜேமி டிமோன் மீது 5 பில்லியன் டாலர் மதிப்பிலான வழக்கு தொடர்ந்துள்ளார். ஃப்ளோரிடாவின் மியாமி-டேட் கவுண்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், ஜேபி மார்கன் சேஸ் வங்கி அரசியல் காரணங்களுக்காக தனது கணக்குகளை மூடியதாகவும், "பிளாக்லிஸ்ட்" செய்து பிற வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் டிரம்ப் தனது வழக்கில் குற்றச்சாட்டியுள்ளார்.
2001ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க கேப்பிடல் கட்டிடத்தில் நடத்த தாக்குதலுக்கு பின்பு தான் JPMorgan Chase வங்கி டிரம்ப் மற்றும் அவரது நிறுவனம் தொடர்பான கணக்குகளை முடக்கியது.

மேலும் டிரம்ப் இந்த வழக்கில், JPMorgan வங்கி தனது சொந்த கொள்கைகளை மீறி அவரை குறிவைத்து கணக்குகளை மூடியதாகக் கூறியுள்ளார். "வங்கி அப்போதைய அரசியல் அலைக்கு ஏற்ப செயல்பட்டு, ஒரு வார்னிங் கூட கொடுக்காமல் வங்கி கணக்குகளை மூடியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தனக்கும் தனது ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், பிற வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் எங்களுடைய நற்பெயருக்கு பெரும் கலங்கம் ஏற்பட்டதாகவும் இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேபி மார்கன் வங்கி தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில். அமெரிக்க அதிபர் தொடுத்த இந்த வழக்கு "நியாயமற்றது" என்று மறுத்துள்ளது. "அரசியல் அல்லது மத காரணங்களுக்காக கணக்குகளை மூடுவதில்லை. சட்ட அல்லது ஒழுங்குமுறை அபாயங்கள் இருந்தால் மட்டுமே மூடுகிறோம்" என்று JPMorgan தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளது. டிரம்ப் வழக்கு தொடர உரிமை உள்ளது, அதேபோல் எங்களுக்கு வழக்கில் எங்களுடைய நியாத்தை விவரிக்க உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளது.
மேலும் ஜேபி மார்கன் வங்கி சிஇஓ ஜேமி டிமோன் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. அவர் டிரம்ப் அமைப்பு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் வியாபாரம் செய்யும் வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் "பிளாக்லிஸ்ட்" உருவாக்கியதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. இது "வேண்டுமென்றே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய்" என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2001ல் நடந்த இந்த பிரச்சனைக்கு தற்போது டிரம்ப் ஜேபி மார்கன் நிறுவனத்தின் மீது டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு முடிவதற்கு சில காலம் ஆகும் என்றாலும், இது அமெரிக்க கார்ப்ரேட் துறை மீது டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எப்படி கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் தாண்டி ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகள் மீதும் வரி விதிப்பதாக டிரம்ப் பேசினாரோ அதேபோல்..
மேலும் இந்த வழக்கு கிரெடிட் கார்டு வட்டி விகிதத்தை 10% ஆக கட்டுப்படுத்தும் டிரம்ப் திட்டத்திற்கு எதிராக வங்கி துறை எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில் வந்துள்ளது. இதில் முக்கியமாக ஜேமி டிமோன் இத்திட்டத்தை "பொருளாதார பேரழிவு" என்று விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications