அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான உறவில் பல ஆண்டுகளாக நிலவி வந்த பதற்றத்திற்கு ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவ தாக்குதல் மூலம் தீர்வு காணப்பட்டது. இதன் பின்பு டிரம்ப் அரசு வெனிசுலா நாட்டில் இருக்கும் மொத்த கச்சா எண்ணெய் வளத்தையும் கைப்பற்றியது. இந்த நிலையில் டிரம்ப் அடுத்தக்கட்டமாக வெனிசுலா நாட்டை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ள விரும்புவதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் வெனிசுலா நாட்டின் எதிர்காலம் குறித்து உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. வெனிசுலா அமெரிக்காவின் "51வது மாநிலம்" ஆக மாறுமா என்ற கேள்வியை டிரம்ப் எழுப்பியிருப்பது, சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் பதிவு
டொனால்டு டிரம்ப் தனது பதிவில், 'உலக பேஸ்பால் கிளாசிக் அரையிறுதி போட்டியில் வெனிசுலா அணி இத்தாலியை 4-2 என்ற கணக்கில் தோற்கடித்ததை பாராட்டினார். வெனிசுலா அணியின் சிறப்பான செயல்பாட்டை குறிப்பிடிய அவர், அந்த நாட்டில் நீண்ட காலத்திற்கு பின்பு நல்ல மாற்றங்கள் நடக்கின்றன என்றும் கூறினார்.
இதை தொடர்ந்து "வெனிசுலா-வின் இந்த வெற்றியின் ரகசியம் என்ன? வெனிசுலா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறலாமா?" என சிரிப்பூட்டும் விதமாக கேள்வி எழுப்பி, 'STATEHOOD #51' என தனது பதிவில் தெரிவித்தார்.
அமெரிக்கா - வெனிசுலா உறவு
2019ஆம் ஆண்டு முற்றிலும் துண்டிக்கப்பட்ட அமெரிக்கா - வெனிசுலா தூதரக மற்றும் வணிக உறவுகள், சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம், ஜனவரி 2026ல் நடந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ஏற்பட்டது. அந்த ராணுவ நடவடிக்கையில் வெனிசுலா அதிபர் Nicolas Maduro மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
51வது மாநிலமாக
இந்த சூழ்நிலையில், டிரம்ப் தனது சமூக வலைத்தளமான Truth Social-ல் வெளியிட்ட பதிவில் வெனிசுலாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றும் சாத்தியம் குறித்து விளையாட்டாக விளையாட்டு போட்டிக்கு குறித்த பதிவில் குறிப்பிட்டார்.
கனடா, கிரீன்லாந்து
இதற்கு முன்பு கனடாவையும், கிரீன்லாந்தையும் அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்துகளை டிரம்ப் முன்வைத்திருந்தாலும், வெனிசுலாவை நேரடியாக "51வது மாநிலம்" என குறிப்பிடுவது இது முதல் முறை என்பதால் இந்த கருத்து அதிக கவனம் பெற்றுள்ளது.
வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். அமெரிக்கா அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை மீட்டெடுத்து உலக சந்தையில் கொண்டு வர துவங்கியுள்ளது. இந்த நிலையில் வெனிசுலாவை 51வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கருத்து பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications