அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்க உள்ள நிலையில், அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக ஹெச்1பி விசாவில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
டிரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளில், குறிப்பாக H1-B விசா மற்றும் கிரீன் கார்டு தொடர்பான கொள்கைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளுக்கு நாள் அச்சம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் கடந்த ஒரு மாதமாகவே இதுகுறித்த கவலை நிலவும் வேளையில், இந்திய ஐடி சேவை நிறுவனங்களான இன்போசிஸ், ஹெச்சிஎல் போன்ற முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் ஹெச்1பி விசாவை நம்பியிருக்கப்போவது இல்லை. இதேபோல் இனி வரும் காலத்தில் அமெரிக்காவில் அதிகளவில் அந்நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கான முடிவுகளையும் எடுத்துள்ளது.
இந்த 2 முக்கியமான மாற்றங்கள் மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக அனுபவம் குறைந்த முதல் நடுத்தர அளவிலான ஐடி - டெக் ஊழியர்களுக்கு எதிர்கால வாய்ப்புகள் குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர். இது மட்டும் அல்லாமல் இப்பிரிவு ஊழியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளில் வேலைவாய்ப்புகளைத் தேட துவங்கியுள்ளனர்.
ஹெட்ரிக் & ஸ்ட்ரக்லஸ் என்ற நிர்வாக அதிகாரிகள் தேடல் நிறுவனத்தின் பார்ட்னரான பூனீத் மல்ஹோத்ரா, H1-B விச்சாக்கலைச் சுற்றி நிலவும் நிச்சயமற்ற தன்மையை உறுதி செய்துள்ளார். இருப்பினும், திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை உடனடியாக அமெரிக்க நிறுவனத்தால் மாற்றுவது என்பது எளிதில் நடக்காத ஒன்று என்றும் அவர் வலியுறுத்தினார்.
டீம்லீஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் சிஇஓ நீதி சர்மா கூறுகையில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் டெக் மற்றும் ஐடி துறையி மிகவும் முக்கியம், இந்த துறை திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் நம்பியுள்ளது. இந்த கொள்கை மாற்றங்கள் நீண்ட கால அடிப்படையில் அவசியம் என்றாலும், இந்திய ஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் பெருமளவில் வெளியேறுவது சாத்தியமில்லை என்று அவர் நம்புவதாகக் கூறுகிறார்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்க உள்ள நிலையில் உலகின் அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக நடந்த அமெரிக்காவின் முன்னணி பில்லியனர்கள் சிறப்பு நிதியுதவியைச் செய்துள்ளனர்.
டிரம்ப் திங்கள்கிழமை இந்திய நேரப்படி இரவு 9.00 - 10.30 மணிக்கு பதவேற்க உள்ளார், இதைத் தொடர்ந்து அவர் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த பின்பு முதல் நாளிலேயே, 100 க்கும் மேற்பட்ட உத்தரவுகளில் அவர் கையெழுத்திட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications