என்விடியா தலைவர் ஜென்சன் ஹுவாங் சீன பெண் உளவாளியுடன் வைத்திருந்த கள்ள உறவு மூலம் அமெரிக்கத் தடைகளைக் கடந்து சிங்கப்பூர் வாயிலாகச் சீனாவுக்குப் பல பில்லியன் டாலர் மதிப்பிலான என்விடியாவின் ஏஐ சிப் சென்றுள்ளது.
இனியும் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்பதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தென்கிழக்கு ஆசிய நாடுகளை டார்கெட் செய்து புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

இப்புதிய கட்டுப்பாட்டின் மூலம் சீனாவுக்கு, அமெரிக்க நிறுவனங்களின் சிப் செல்வதை மொத்தமாகத் தடை செய்ய முடிவு செய்துள்ளது டிரம்ப் அரசு.
அதாவது சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இருக்கும் டேட்டா சென்டர் நிறுவனங்கள் இனி என்விடியா உட்பட இதர அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து ஏஐ சிப் வாங்க வேண்டும் என்றால் அமெரிக்க அரசிடம் தனிப்பட்ட முறையில் லைசென்ஸ் பெற வேண்டும்.
இந்த லைசென்ஸ் இல்லா நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சிப் வாங்க முடியாது என்ற புதிய கட்டுப்பாட்டைத் திங்கட்கிழமை அமெரிக்க காமர்ஸ் துறை வெளியிட்டது.
கடந்த சில ஆண்டுகளாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும், பயிற்சி அளிப்பதிலும் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் டேட்டா சென்டர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதில் பெருமளவிலான கட்டமைப்பைச் சீனாவின் அலிபாபா, பையிட்டான்ஸ் போன்ற நிறுவனங்களின் ஏஐ மாடல்களின் வளர்ச்சிக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாகச் சீனாவின் ஏஐ கம்பியூட்டிங் பவரில் சுமார் 30 சதவீதம் வெளிநாட்டு டேட்டா சென்டர் உதவியால் பூர்த்தி செய்யப்படுவதாகக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்க ஏஐ சிப்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர 132 பக்க கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டு அமெரிக்க அரசு தற்போது களத்தில் இறங்கியுள்ளது, இதேவேளையில் சீனாவுக்காக என்விடியா உட்பட பல நிறுவனங்கள் ஸ்டெப்டவுன் சிப்களை உருவாக்கியுள்ளது, இதுவும் தற்போதைய கட்டுப்பாட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் சிப் நிறுவனங்களின் வருவாய் தொடர்ந்து குறைய வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்படுகிறது.
அமெரிக்க அரசு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தாண்டி பிரேசில் நாட்டையும் இந்த கட்டுப்பாட்டிற்குள் சேர்த்துள்ளது.
அமெரிக்காவின் புதிய கட்டுப்பாட்டு விதிகளைச் சிங்கப்பூர் மற்றும் பிரேசில் அரசு தீவிரமாக ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது, மேலும் இதில் வர்த்தக தடையாக இந்த விதி விளங்குகிறதா என்ற கோணத்திலும் இப்புதிய கட்டுப்பாட்டைப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
