திருப்பூர்: அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பு இந்தியாவில் ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில்களை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் சிக்கியுள்ளனர்.
50% வரி: அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு விதித்திருக்கும் 50% வரி தமிழ்நாட்டை சேர்ந்த ஜவுளி மற்றும் பின்னலாடை துறையை சார்ந்தவர்களை பெருமளவில் பாதிப்படைய செய்திருக்கிறது. திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பின்னலாடை தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இந்த வரி விதிப்பின் தாக்கத்தை உணர தொடங்கியுள்ளனர்.

திருப்பூர் ஜவுளி: திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவரான முத்துரத்தினம் 2024-25ஆம் தேதி ஆண்டில் 40,000 கோடி மதிப்பிலான பொருட்களை திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்திருப்பதாக கூறுகிறார். திருப்பூரில் தயாரிக்கப்படும் ஜவுளியில் 40 சதவீதம் அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது என கூறும் அவர் தற்போது இது முழுவதுமே கேள்விக்குறியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
ரூ.73,000 கோடி சந்தை: அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில் முடங்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அமெரிக்க சந்தைக்கான ஆயத்த ஆடைகள் , துணிமணிகள், வீட்டில் பயன்படுத்தப்படும் துணிகள் என ஆண்டுதோறும் 73,000 கோடி மதிப்பிலான ஜவுளி அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தான் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்று சந்தையாக இந்தியாவை நோக்கி வந்தன.
போட்டி நாடுகளுக்கு செல்லும் சூழல்: இதனால் திருப்பூர், கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பின்னலாடை நிறுவனங்களுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் கிடைத்தன. ஆனால் டிரம்பின் இந்த வரி விதிப்பு அமெரிக்க நிறுவனங்கள் போட்டி நாடுகளான வங்கதேசம், வியட்நாம் ,கம்போடியா உள்ளிட்ட நாடுகளை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது நடந்தால் ஜவுளி உற்பத்தி துறையே ஸ்தம்பிக்கும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வரிச்சுமையை ஏற்க முடியாது: கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வேகமான வளர்ச்சி பெற்ற ஜவுளி உற்பத்தி துறை தற்போது முழுவதுமாக முடங்கியுள்ளது என கூறுகின்றனர். சில நிறுவனங்கள் முழுவதுமாகவே அமெரிக்க சந்தையை நம்பி தான் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டன, அவற்றின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.3 டாலர்களுக்கு ஒரு டீசர்ட்டை வாங்கிய அமெரிக்க நிறுவனங்கள் 50% வரி விதிப்பு காரணமாக இனி அதற்காக நான்கரை டாலர்களை செலவிட வேண்டும்.
ஆலைகள் மூடல், பணிநீக்கம்: எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த வரி பணத்தையும் தங்களையே ஏற்று கொள்ள சொல்வதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சில ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆலைகளையே மூடிவிட்டார்களாம். மேலும் 40% தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது என முடிவு எடுத்திருக்கிறார்களாம்.
டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை நேரடியாகவே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்துள்ளது. மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சினையை தீர்க்க தங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
More From GoodReturns

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு



Click it and Unblock the Notifications