டெல்லி: அமெரிக்க அரசாங்கத்தின் 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை இந்தியாவை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு எம்எஸ்எம்இ துறை இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்காக ஒரு பிரத்தியேக திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக மணி கண்ட்ரோல் தளம் செய்து வெளியிட்டு இருக்கிறது.
அமெரிக்க அரசின் வரி விதிப்பால் இந்தியாவில் அதிக பாதிப்பை சந்தித்திருப்பது எம்எஸ்எம்இ துறை. ஏற்றுமதி தடை பட்டு பல லட்சம் வேலைகள் இழக்கப்படும் சூழல் உண்டாகியுள்ளது. இதனை தீர்க்க Direct income support என்ற பெயரில் நேரடி வருமான ஆதரவை வழங்குவதற்கான ஆலோசனையை மத்திய அரசு நடத்தி வருகிறதாம். இது இந்தியாவை சேர்ந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி பிரச்சனையை மூலம் ஏற்படும் வருமான பாதிப்புகளில் இருந்து மீட்கும் வகையில் இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருப்பதாக மணி கண்ட்ரோல் வெளியிட்டு இருக்கும் செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இது தொடர்பாக தற்போதைக்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த நிதி உதவியை எப்படி வழங்குவது என்பது குறித்து அடுத்த கட்ட ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அரசு தற்போது விவாதித்து வருகிறதாம் . விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர முதல் கட்டமாக எம்எஸ்எம்இ துறையை சார்ந்தவர்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் ஒரு கணிசமான தொகை கடனாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் எந்த அடமானமும் இல்லாத அதிக உச்சவரம்பு கொண்ட collateral-free கடன் வரம்பினை அரசு உயர்த்த இருக்கிறதாம்.
மேலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் என்ற பெயரில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு திட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறதாம் இது ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் தான். இது மட்டும் இன்றி எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படவும் அவர்களிடம் பணப்புழக்கம் இருப்பதை உறுதி செய்யவும் அவர்களுக்கு அதிக அளவில் கடன் கிடைப்பதை உறுதி செய்வது , வேறு நாடுகளின் சந்தைகளை எளிமையாக அணுகுவதற்கும் ஏற்றுமதியை பல்வேறு நாடுகளுக்கு பரவலாக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளையும் அரசு எடுக்க இருக்கிறதாம்.
அடுத்து வரக்கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்களாம் . தற்போதைக்கு எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கிரெடிட் கேரண்டி ஸ்கீம் என்ற திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது இதனை 20 லட்சம் ரூபாய் வரை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications