கோவை: அமெரிக்க அரசாங்கம் இந்தியா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. இது இந்தியாவை சேர்ந்த பல்வேறு தொழில்களையும் பெருமளவில் பாதிப்படைய வைத்திருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நடவடிக்கை சிறுகுறு நடுத்தர தொழில்கள் பெருமளவில் பாதிக்கும்.
கோவையில் என்ன பாதிப்பு: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் கோயம்புத்தூரை சேர்ந்த பல்வேறு MSME நிறுவனங்கள் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கையால் பெரிய அளவில் முடங்கும் அபாயம் இருப்பதாக கொடிசியா தலைவர் கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கொடிசியா தலைவர் கார்த்திகேயன் அளித்துள்ள தகவலில், அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை கோயம்புத்தூரின் எம்எஸ்எம்இ துறையை பெருமளவில் பாதிக்கும் என கூறுகிறார்.

எம்எஸ்எம்இ துறை முடங்கும்: ஏனெனில் கோயம்புத்தூரில் எம்எஸ்எம்இ துறையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 30 லிருந்து 40 சதவீத பொருட்கள் அமெரிக்க சந்தையை இலக்காக நோக்கி தான் தயாரிக்கப்படுகின்றன. எனவே இந்த நடவடிக்கையின் மூலம் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பை எம்எஸ்எம்இ துறை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டு இருக்கும் அவர் இதனை எப்படி சரி செய்ய போகிறோம் என ஆய்வு செய்ய வேண்டும் வேறு நாடுகளுடனான ஏற்றுமதி மற்றும் வர்த்தக கொள்கைகளை ஆராய வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறது என கூறியிருக்கிறார் .
அமெரிக்க சந்தை தான் இலக்கு: கோயம்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மற்றும் பொறியியல் சம்பந்தப்பட்ட பொருட்கள் அமெரிக்க சந்தையை இலக்காக வைத்து அவர்களுக்காகவே பிரத்தியேகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன . இவை அனைத்தும் தற்போது முடங்கும் நிலை இருக்கிறது என கூறியிருக்கிறார் . பல்வேறு நிறுவனங்களும் 100 சதவீதம் தங்கள் பொருட்களை அமெரிக்க சந்தைக்கு தான் ஏற்றுமதி செய்கின்றன அவற்றின் நிலை என்ன ஆகப்போகிறது தெரியவில்லை என கூறியிருக்கிறார். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை மூலம் 3 லட்சம் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
வேறு சந்தையை பிடிப்பது எளிதல்ல: ஏனெனில் அமெரிக்க சந்தைக்கு மாற்றாக இந்த பொருட்களை வாங்கும் வேறு சந்தை நமக்கு கிடைக்காது என கூறும் அவர் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் சந்தையை பிடிக்க 5 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்கிறார். அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கை எம்எஸ்எம்இ நிறுவனங்களின் இருப்பையே கேள்விக்குள் ஆக்கி இருக்கிறது என கூறியிருக்கிறார்.
ஸ்டீல் இறக்குமதி வரி: மத்திய அரசு ஸ்டீல் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் எம்எஸ்எம்இ துறையில் உற்பத்தி இணைக்கபப்ட்ட நிதி உதவிகளை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்லார். அமெரிக்காவின் நடவடிக்கையில் முதலில் பாதிக்கப்படும் துறையாக எம்எஸ்எம்இ தான் இருக்கிறது என கூறி இருக்கும் அவர் கோவை நிறுவனங்களுக்கான பண வருகை என்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விடும், மூலப் பொருட்கள் கொள்முதல் நிறுத்தப்படும் ஏற்கனவே வாங்கி வைத்த பொருட்களையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
அரசுக்கு கோரிக்கை: எம்எஸ்எம்இ துறை இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர எத்தனை காலம் தேவைப்படும் என்பதையே கணிக்க முடியவில்லை எனக் கூறியிருக்கிறார். அடுத்த 12 மாத காலத்திற்கு இந்த வரி விதிப்பின் தாக்கத்தை நம்மால் உணர முடியும் இந்தியா பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டும் அவர் அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடு என்பதால் அரசாங்கம் இந்த பிரச்சனையை பேசி தீர்த்து எம்எஸ்எம்இ துறைக்கான உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
More From GoodReturns

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications