இந்திய பொருளாதாரம் அடுத்த 6 மாதத்திற்கு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த MPC கூட்டத்தில் ரெப்போ விகித்ததை எப்போதும் இல்லாமல் 50 அடிப்படை புள்ளிகள் குறைந்தது. ஆனால் சர்வதேச சந்தையின் பாதிப்பு, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதையும் மறந்துவிட முடியாது.
இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகத்தில் துவங்கி, டாலர் மதிப்பு, முதலீடுகள் என பல வகையில் பன்னாட்டு வர்த்தக சூழ்நிலை இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இத்தகைய நிலையில் உலக வங்கி சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலக வங்கி, 2025-ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 2024-இல் 2.8% ஆக சர்வதேச ஜிடிபி வளர்ச்சி, தற்போது 2.3%-ஆக குறைத்துள்ளது. உலகளவில் அதிகரிக்கும் வர்த்தக பதற்றங்கள், குறிப்பாக புதிய இறக்குமதி வரிகளே இந்தக் ஜிடிபி வளர்ச்சி குறைப்புக்கு முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இது 2008 ரெசிஷனுக்கு பிறகு மோசமான பொருளாதார வளர்ச்சியை இந்த வருடம் உலக நாடுகள் பதிவு செய்யலாம் என கணித்துள்ளது.
அமெரிக்காவில் ரெசிஷன் அச்சம்: அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2025-இல் 1.4%-ஆக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது, இது முந்தைய ஆண்டின் வளர்ச்சி அளவில் பாதி என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. ஏற்கனவே எலான் மஸ்க் இந்த ஆண்டு பிற்பாதியில் அமெரிக்காவில் ரெசிஷன் வரும் என டிவிட்டரில் கூறிய நிலையில், உலக வங்கியின் இந்த ரிப்போர்ட் ரெசிஷன் அச்சத்தை அதிகரித்துள்ளது.
ஆனால் உலக வங்கி சர்வதேச அளவில் ரெசிஷன் வருவதற்கான வாய்ப்பு என்பது 10 சதவீதத்திற்கு கீழ் உள்ளது என கணித்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் சூழ்நிலை குறித்து தனிப்பட்ட முறையில் பேசவில்லை. ஆனால் உலகளவில் நிலையற்ற தன்மை அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் முதலீடுகள் குறையும் எனவும் அறிவித்துள்ளது உலக வங்கி.
அமெரிக்க அதிபரான டிரம்ப அரசு அறிவித்துள்ள புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள், பல நாடுகளிலிருந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட உயர் வரிகள், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்தியுள்ளன. இதற்கு பதிலடியாக சீனா உள்ளிட்ட நாடுகளும் வரி உயர்வுகளை அறிவித்து, உலக வர்த்தகத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
இதனால் அமெரிக்காவில் பணவீக்க பிர்சனை மட்டும் அல்லாமல் சர்வதேச வர்த்தகத்திலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது நேரடியாகவும், மறைமுகமாகவும் பிற நாடுகளையும் பாதித்துள்ளதால் தற்போது சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் அடைந்துள்ளது.
உலக வங்கி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை வெளியிடும் 'உலகப் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள்' அறிக்கையின்படி, அமெரிக்கா, சீனா, ஐரோப்பா மற்றும் 6 வளர்ந்து வரும் நாடுகள் உட்பட உலகில் சுமார் 70% நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை இந்த ஆண்டுக்கு குறைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன் செய்யப்பட்ட மதிப்பீடுகளை விட குறைவான அளவை உலக வங்கி கணித்துள்ளது. டிரம்ப் அறிமுகப்படுத்திய வரி அவ்வபோது மாறி மாறி அமலாக்கம் செய்யப்படுவதால், அமெரிக்காவின் சராசரி வரி விகிதத்தை 3%-இலிருந்து 15-17 சதவீதம் என்ற நூற்றாண்டு உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக சீனா மற்றும் பிற நாடுகள் திருப்பி வரி விதித்துள்ளன. இதனால், உலகளாவிய வர்த்தக போர் வெடித்துள்ளது.
மேலும் உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் இந்திர்மிட் கில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுகையில், "உலகப் பொருளாதாரம் மீண்டும் மோசமான நிலையை எதிர்கொள்கிறது" என எச்சரித்தார்.
மேலும் இவர் பேசுகையில் 2027-க்குள் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.5% ஆக இருக்கும் எனவும் இது 1960-களுக்குப் பிறகு மிகவும் மெதுவான வேகமாகும் எனவும் கணித்துள்ளார். உலக நாடுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications