அமெரிக்க அதிபர் டொனால்ட் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியை விதித்தார். பின்னர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி கூடுதலாக 25 % என மொத்த 50% வரியை விதித்தார்.
இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி என்பது ஏற்றுமதி துறை சார்ந்த தொழில்களை வெகுவாக பாதித்தது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை துறையின் ஏற்றுமதிக்கான அடித்தளமாக விளங்குகிறது தமிழ்நாடு. நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் 28 சதவீத பங்களிப்பை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 75 லட்சம் தொழிலாளர்களுக்கு இந்த ஜவுளி துறை தான் வேலை வாய்ப்பு வழங்குகிறது.

அதேபோல தோல் பொருள் மற்றும் காலணி ஏற்றுமதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தமிழ்நாடு 40 சதவீத பங்களிப்பு தருகிறது. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் இந்த 50 சதவீத வரிவிதிப்பு ஒட்டுமொத்தமாக 80 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை பாதிக்க செய்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் பின்னலாடை தலைநகரமான திருப்பூரில் உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டர்களில் ஏற்றுமதியாளர்களுக்கு 15,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனங்களில் 30% வரை கட்டாய உற்பத்தி குறைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் புதிய ஆர்டர்கள் கிடைக்காமல் திருப்பூர், கோயம்புத்தூர் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் 60 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இது மட்டுமில்லாமல் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களும் இந்த வரி விதிப்பால் கடமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என சுட்டிக்காட்டி இருந்தார்.
திருப்பூர் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் முதன்மையான சந்தையே அமெரிக்கா தான். பல்வேறு நிறுவனங்களும் 100% ஆர்டர்களை அமெரிக்க சந்தைக்கு தான் அனுப்பி வைக்கின்றன. எனவே 50% வரி விதிப்பால் லாபத்தை குறைத்துக் கொண்டு நஷ்டத்திற்காக பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலைக்கும் ஆளாகி இருப்பதாக வேதனை தெரிவித்தனர். இது நீடித்தால் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்றும் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் தான் அமெரிக்கா, இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பை 18 சதவீதமாக குறைத்து லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்திருக்கிறது. இதன் மூலம் பெரிய அளவில் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்ட காலணி உற்பத்தியாளர்களும் பலன் பெற இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு இழந்ததை எல்லாம் இந்த ஆண்டு அவர்களுக்கு திரும்ப பெறுவதற்கான ஒரு வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா இந்தியா மீதான வரியை குறைத்திருப்பது சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு பலன் அளித்துள்ளது. கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தமும் ஏற்பட்டு விட்டால் இன்னும் இவர்களின் வாழ்க்கையில் ஒளி வீசும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications