அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வர்த்தக கொள்கைகள் உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில் எச்சரித்துள்ளார். டிரம்ப்-ன் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இதில் வசூலித்த வரியை திருப்பி அளிக்க உத்தரவிட்டத்து. இதை சரி செய்யும் பொருட்டு புதிய சட்டத்தின் கீழ் டிரம்ப் அரசு 15% வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
இது இந்தியாவின் சிறு-நடுத்தர தொழில்களுக்கு (SME) பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். மத்திய கிழக்கு போர் காரணமாக இந்தியாவிலிருந்து அரிசி, முட்டை, டெக்ஸ்டைல் போன்ற பொருட்கள் ஏற்றுமதி தடைபட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் புதிய வரி இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கொள்கை
அமெரிக்காவில் டிரம்ப் அரசு ரெசிப்ரோக்கல் வரி மூலம் வசூலித்த பணத்தை உலக நாடுகளுக்கு திரும்ப அளிக்க முடியாது என்று கூறிய நிலையில், உலகளாவிய வாடிக்கையாளர்கள் உடனடியாக அமெரிக்க நீதிமன்றத்திற்கு சென்றனர். இந்த வழக்கில் கோர்ட் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யப்பட்ட விற்பனையாளிடம் வசூலித்த தொகையை திருப்பி அளிக்க தீர்ப்பு அளித்தது.
ரெபிப்ரோக்கல் வரி மூலம் டிரம்ப் அரசு ஏற்கனவே 175 பில்லியன் டாலர் அளவிலான நிதியை வசூவித்தாக பெருமை பேசியது, ஆனால் இந்த எண்ணிக்கை டிசம்பர் மாதத்திற்கானது. 2025ல் அமெரிக்கா சுமார் 287 பில்லியன் டாலர் அளவிலான வரியை அமெரிக்கா வசூலித்துள்ளது, இது 2024ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 192 சதவீதம் அதிகமாகும். இந்த நிலையில் இப்பணத்தை திருப்பி கொடுக்க வேண்டுமாயின் புதிகாக கடன் வாங்கி செலுத்த வேண்டிய கட்டாயம் அமெரிக்க அரசுக்கு உருவாகியுள்ளது என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்திய SME-களுக்கு பெரும் பின்னடைவு
இந்தியாவிலிருந்து ஏற்கனவே மத்திய கிழக்குக்கு செல்லும் பொருட்கள் தடைபட்டுள்ளன. அரிசி, முட்டை போன்றவை கல்ப் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சூரத்திலிருந்து டெக்ஸ்டைல் பொருட்கள் போகவில்லை. இது இந்திய SME தொழில்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஏற்றுமதி மட்டுமல்ல, இறக்குமதி துறைகளும் பாதிக்கப்படும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறினார். மேலும் விமான போக்குவரத்து செலவுகளும் உயர்ந்துவிட்டது.
இந்த நிலையில் ரெசிப்ரோக்கல் வரிக்கு ஈடாக டிரம்பின் செக்ஷன் 122 பயன்படுத்தி 15% வரையிலான வரியை உலக நாடுகளுக்கு விதிக்க முயற்சி செய்து வருகிறார். இது இந்தியாவின் ஏற்றுமதியை மேலும் பாதிக்கும்.
வரி மேல் வரி விதிக்கப்படுவதால் அமெரிக்காவில் இன்பிளேஷன் (inflation) வருவது உறுதியானது என்றும், அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாகும் பட்சத்தில் தங்கம் விலை உயர்வுக்கு சாதகமாக இருக்கும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் என சுட்டிக்காட்டினார்.


Click it and Unblock the Notifications