அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்திருக்கிறது. இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
50% வரி விதிப்பு: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதன் காரணமாகவே இந்தியாவிற்கு இப்படி அதிகபட்ச வரியை விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கிறது. ரஷ்யா இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் அரசு மீதும் அந்நாட்டு நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன.

ரஷ்யா மீது தடை: ரஷ்ய நிறுவனங்களிடம் எந்த நாடும் வர்த்தகம் செய்யக்கூடாது குறிப்பாக கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா அறிவித்தது . ஆனால் ரஷ்யாவை பொறுத்தவரை பல ஆண்டுகளாகவே இந்தியாவுடன் நெருங்கிய நட்பு கொண்ட ஒரு நாடாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் தங்களுடைய கச்சா எண்ணெயை வாங்காததன் காரணமாக ரஷ்யா அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்கத் தொடங்கியது.
ரஷ்யாவிடம் தள்ளுபடியில் எண்ணெய் கொள்முதல்: மூன்று ஆண்டுகளாகவே இந்தியாவை சேர்ந்த அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் சரி தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களும் சரி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்குகின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி அதனை சுத்திகரித்து இந்தியாவிலும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன. சீனா, இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி ரஷ்யாவை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்றன, இந்த பணம் உக்ரைன் போருக்கு பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்கா குற்றம் சாட்டியிருக்கிறது.
எவ்வளவு இறக்குமதி?: 2022ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது 0. 2 சதவீதமாகத் தான் இருந்தது தற்போது அது 40 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் அதிக அளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது. 2025 ஜூலை நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 6,18,000 பேரல்கள் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம்: முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவை சேர்ந்த பல்வேறு கச்சா எண்ணெய் நிறுவனங்களுடன் நீண்ட காலத்திற்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த கச்சா எண்ணெய் வாங்கி இந்தியா மட்டும் இல்லாமல் ஐரோப்பிய சந்தைக்கும் விற்பனை செய்கிறது . ஏப்ரல் 2025 நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ரஷ்யா கச்சா எண்ணையின் பங்கு 57 சதவீதமாக இருக்கிறது. அந்த வகையில் அதிக அளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நிறுவனமாக இருக்கிறது.

தனியார் நிறுவனங்கள்: நயாரா எனர்ஜி நிறுவனம் ஒரு நாளைக்கு 2,40,000 பேரல்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் ரஷ்யா எண்ணெய் வாங்கும் இரண்டாவது பெரிய தனியார் நிறுவனம் இது. அடுத்ததாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகின்றன.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளைக்கு 2 லட்சம் பேரல்கள் எண்ணெய் வாங்குகிறது ஆனால் கடந்த மாதத்தில் இருந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து இருக்கிறது . மாறாக அமெரிக்கா, கனடா ,மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடமிருந்து 7 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்க தொடங்கி இருக்கிறது.

அமெரிக்க அரசின் அழுத்தம்:ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஜூலை மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து 20,000 பேரல்கள் தான் வாங்கி இருக்கிறது பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை 27 சதவீதம் குறைத்து இருக்கிறது. அமெரிக்க அரசின் அழுத்தம் காரணமாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்திருக்கின்றன.
ரஷ்யா கச்சா எண்ணெய்: இந்தியாவைப் பொறுத்தவரை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்யாவிடம் இருந்து மொத்தமாகவே ஒரு நாளைக்கு 68,000 பேரல்கள் தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் 2.15 மில்லியன் பேரல்கள் என உச்சத்தை எட்டியது ,கடந்த ஜூன் மாதம் 2.08 மில்லியன் என்றும் ஜூலை மாதத்தில் 1.6 மில்லியன் என்றும் குறைந்து இருக்கிறது . இந்தியாவில் ரஷ்யாவிடம் இருந்து வரக்கூடிய பெரும்பாலான எண்ணெய் தனியார் நிறுவனங்களுக்கு தான் செல்கிறது.
இந்திய நிறுவனங்கள் வர்த்தகம்: இந்திய நிறுவனங்கள் நேரடியாக ரஷ்ய நிறுவனங்களுக்கு பணம் செலுத்தாமல் ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த வர்த்தகர்கள் வாயிலாக திராமில் பணம் செலுத்துகின்றன. இதனால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவது கிடையாது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு பேரலுக்கு தற்போது 2 டாலர்கள் வரை தள்ளுபடி விலையில் ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.
முகேஷ் அம்பானிக்கு சிக்கல்: அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள அழுத்தம் அதிகளவில் தனியார் நிறுவனங்களுக்கே செல்லும். குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம் தான் அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்பதால் முகேஷ் அம்பானிக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications