ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவது யார்..? டிரம்ப்-ன் 25% கூடுதல் வரிக்கு இவங்க தான் காரணம்..?

அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் டொனால்ட் டிரம்ப் இந்தியா தங்கள் நாட்டுப் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிப்பதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பை அறிவித்தார். பின்னர் ஆகஸ்ட் மாதம் வரை அந்த வரி விதிப்பு நடவடிக்கையை தள்ளி வைத்தார் .

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் 25%வரி: இந்த சூழலில் திடீரென இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை விரித்த டொனால்ட் டிரம்ப் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அதற்கு தண்டனை கொடுக்கும் வகையில் இந்திய பொருள்களுக்கு மேலும் 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரியை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்தியா மீது அதிகபட்ச வரியை சுமத்துவதற்கு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தான் முக்கிய காரணமாக கூறியிருக்கிறார்.

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவது யார்..? டிரம்ப்-ன் 25% கூடுதல் வரிக்கு இவங்க தான் காரணம்..?

உக்ரைன் - ரஷ்யா போர்: உக்ரைன் ரஷ்யா போரை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் அனைத்து வணிக ரீதியிலான தொடர்பையும் துண்டித்துக் கொண்டன. எந்த ஒரு நாடும் ரஷ்யாவுடன் தொழில்புரிய கூடாது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்க கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. இது ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா கருதியது.

இந்திய நிறுவனங்களுக்கு லாபம்: ஆனால் ரஷ்யாவோ இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் தங்களுடைய கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தொடங்கியது. இந்தியா நிறுவனங்களுக்கு மற்ற நாடுகளிடமிருந்து வாங்குவதை விட ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்போது ஒரு பேரலுக்கு 3 முதல் 30 டாலர்கள் வரை தள்ளுபடியாக கச்சா எண்ணெய் கிடைக்கிறது. எனவே இது லாபமாக இருக்கிறது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும்போது இந்திய நிறுவனங்கள் டாலராக செலுத்த தேவையில்லை என்பதும் இந்திய நிறுவனங்களுக்கு பெரிய சாதகமாக தெரிந்தது.

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவது யார்..? டிரம்ப்-ன் 25% கூடுதல் வரிக்கு இவங்க தான் காரணம்..?

அரசு நிறுவனங்களின் பங்கு: ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி பார்த்தால் இந்தியாவில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தான் அதிக அளவில் ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தெரிய வருகிறது . ரஷ்யாவிடமிருந்து வரும் 35% கச்சா எண்ணெய்யை இந்தியாவில் அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ,பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் மங்களூர் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்கள் தான் வாங்குகின்றன.

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவது யார்..? டிரம்ப்-ன் 25% கூடுதல் வரிக்கு இவங்க தான் காரணம்..?

அதிக எண்ணெய் வாங்கும் ரிலையன்ஸ்: இந்த பட்டியலில் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து வரக்கூடிய கச்சா எண்ணெயில் 27 சதவீத எண்ணெய்யை ரிலையன்ஸ் நிறுவனம் தான் வாங்குகிறது. ரஷ்ய நிறுவனங்களிடம் பல ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தையும் செய்திருக்கிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.

நயாரா எனர்ஜி:அடுத்ததாக ரஷ்யாவிடம் இருந்து வரக்கூடிய எண்ணெயில் 17 சதவீதம் நயாரா எனர்ஜி நிறுவனத்திற்கு செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்கும் பெரிய இரண்டு தனியார் நிறுவனங்களாக ரிலையன்ஸ் மற்றும் நயாராக எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன மற்ற நிறுவனங்கள் 21% எண்ணெயை வாங்குகின்றன.

ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல்: அமெரிக்க அதிபரின் மிரட்டல் இருந்தாலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தொடர்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் இது ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல்கள் என்ற அளவில் நீடிப்பதாக எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிடுகிறது. இந்தியா இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் 38 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்துதான் வாங்கப்படுகிறது. அரசு இதுவரை எந்த நிறுவனமும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள் என எந்த ஒரு அறிவுறுத்தலையும் வழங்கவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+