அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக அறிவித்துள்ள வரி விதிப்பு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக 3 துறையில் பெரும் வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் வர்த்தக பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் இந்தியா மீது ரெசிப்ரோக்கல் வரியாக 25 சதவீதமும், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் காரணத்தால் கூடுதல் 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரியை இந்திய பொருட்கள் மீது விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 50 சதவீத வரி விதிப்பு மூலம் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட கூடிய 3 துறைகள் இதுதான்.
1. ரத்தினம் மற்றும் நகைகள்
2. டெக்ஸ்டைல்
3. கடல் சார் உணவுகள்
இந்த 3 துறைகளும் அதிகப்படியான மக்கள் பணியாற்றும் துறையாக உள்ளதால், டிரம்ப் விதித்த வரியால் இந்திய பொருட்களின் விலை உயர்ந்து அமெரிக்க சந்தையில் போட்டிப்போட முடியாத நிலை உருவாகும். இதனால் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் செய்யும் வர்த்தகம் குறைவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் இழப்புகள் உருவாகும்.
இந்த சுங்கவரி உயர்வு அமலானால், 2025 ஆம் ஆண்டு அமெரிக்க சந்தையில் இந்திய டெக்ஸ்டைல் துறையின் விற்பனை 60 சதவீதம் வரை குறையலாம் என்று உலக வர்த்தக ஆராய்ச்சி முயற்சி (Global Trade Research Initiative) அமைப்பு மதிப்பிடுகிறது. இதனால் திருப்பூர் போன்ற ஏற்றுமதி வர்த்தரம் நிறைந்த பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் மற்றொரு கணிப்பில் சூரத் வைர வர்த்தக துறையில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சூரத்தில் பட்டைதீட்டப்படும் வைரம் 70-80 சதவீதம் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவிற்கும் தான் செல்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளனர். மும்பையை தளமாகக் கொண்ட கிரியேட்டிவ் குழுமத்தின் தலைவர் விஜய் குமார் அகர்வால் இதுக்குறித்து பேசுகையில், ஆகஸ்ட் 27 முன்பு எவ்வளவு பொருட்களை அமெரிக்க சந்தைக்கு அனுப்ப முடியுமோ, அனைத்து பொருட்களையும் அனுப்ப முயற்சிப்பதாக கூறினார்.
இவருடைய நிறுவனம் அமெரிக்க சந்தையில் சுமார் 80 சதவீதம் வரை சார்ந்துள்ளது. ஆனால், ஆகஸ்ட் 27 முன்பு செய்யப்படும் வர்த்தகம் என்பது வெறும் தற்காலிக தீர்வு மட்டுமே, இது அடுத்த 2-3 மாத வர்த்தகத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுமே தவிர நிரந்தர தீர்வு இல்லை என்று எச்சரித்தார்.
விஜய் குமார் அகர்வால் தனது 15,000 முதல் 16,000 ஊழியர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் வர்த்தகத்தை கொண்டு இருக்கும் இந்திய நிறுவனங்கள் மாற்று மற்றும் புதிய சந்தைகளை ஆராய்ந்து, தங்கள் தொழிலை பாதுகாக்க முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த சுங்கவரி உயர்வு, குறைந்த லாபமுள்ள தொழில்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கையை பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால், வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டால், பல குடும்பங்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படும்.
இந்த நிலைமையை எதிர்கொள்ள, ஏற்றுமதியாளர்கள் அரசு மற்றும் தொழில் சங்கங்களுடன் இணைந்து புதிய உத்திகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கு சாதகமாக முடிந்தால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
More From GoodReturns

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications