அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்திருப்பதால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் ஐபோன்களை இறக்குமதி செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறது.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் ,ஆப்பின் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் இந்தியாவின் தயாரிக்கப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு முடிவெடுத்திருப்பதாக கூறி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவீதம் வரியை விதித்து இருக்கிறார். ஏற்கனவே சீனப் பொருட்களுக்கு 20 சதவீத வரி இருக்கும் நிலையில் அத்துடன் சேர்த்து கூடுதலாக 34 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியில் கூடுதலாக 34 சதவீதத்தை சேர்த்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தக சூழல் சவாலானதாக மாறியிருக்கிறது. சீனா தன்னுடைய வரி நடவடிக்கையை திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை என்றால் மேலும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சீன தரப்பில் எப்படி எதிர்வினை ஆற்றும் என்பதை கணிக்க முடியவில்லை.
அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்திருக்கிறது, மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பொருட்களுக்கான வரி சற்று குறைவாக இருக்கிறது. எனவே ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்களை சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது 50 சதவீதத்திற்கும் அதிகமான வரியை செலுத்த வேண்டும் இதுவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் போது 26 சதவீத வரி செலுத்தினால் போதும்.
எனவே அமெரிக்காவில் விற்பனைக்கு தேவையான தங்களுடைய ஐபோன்களை பெரிய அளவில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. தங்களுடைய ஐபோன் தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கு பெரிய அளவில் சீனாவை தான் சார்ந்து இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தான் இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக மோதல் ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தற்போது 550 டாலர்களை செலவிடுகிறது இதுவே புதிய வரி நடைமுறை மூலம் கூடுதலாக 300 டாலர்களை செலவிட வேண்டி இருக்கும். அதாவது 850 டாலருக்கு போனை இறக்குமதி செய்து ஆப்பிள் நிறுவனம் 1100 டாலருக்கு விற்பனை செய்கிறது. இது தங்களுடைய நிதி நிலைமையை பாதிக்கும் என்பதால் இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் போன்களை இறக்குமதி செய்ய முடிவு செய்திருக்கிறது.
இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன. தற்போது ஆப்பிள் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் இருந்து ஐபோன்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருப்பதால் இந்த ஆலைகளில் ஐபோன் உற்பத்தி மேலும் அதிகரிக்கப்படும். இந்த ஆலைகள் இரண்டுமே தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications