டிரம்ப் 'நாங்க ரொம்ப நைஸ்'.. சீனாவுக்கு இனி ராஜயோகம்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு..!!

சீனாவைக் கட்டம் கட்டி அடித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுடனான வர்த்தகப் போரில் ஒரு புது திருப்பத்தை உருவாக்கியிருக்கிறார். சொன்ன நம்பமாட்டிங்க, நேற்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசியதைக் கேட்டு சீன தொழிலதிபர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடாது தான் மிச்சம். அப்படி என்ன நடந்தது..?

செவ்வாய்க்கிழமை, சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான வரிகளை கலைக்க ஒரு ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால் சீனா மீது விதிக்கப்பட்டு இறக்கும் ரெசிப்ரோக்கல் வரி பெரிய அளவில் குறைக்கலாம் என்று டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

டிரம்ப் 'நாங்க ரொம்ப நைஸ்'.. சீனாவுக்கு இனி ராஜயோகம்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு..!!

டிரம்ப்-ன் இந்த புதிய அணுகுமுறை மாற்றம், கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த வர்த்தக பதற்றங்களுக்கும் தற்காலிக ஃபுல்ஸ்டாப் வைக்கப்பட்டு உள்ளது. சொல்லப்போனால் நேற்று டிரம்ப் பேச்சுக்குப் பின்பு அமெரிக்கப் பங்குச்சந்தை, டாலர் மதிப்பு டக்கென உயர்ந்துவிட்டது. தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் விலை 200 டாலர் வரையில் குறைந்துள்ளது.

டொனால்டு டிரம்ப் அப்படி என்னதான் சொன்னார்?: வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சீனா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால் சீனா மீது தற்போது விதிக்கப்பட்ட 145 சதவீத வரி ரொம்ப அதிகமாக உள்ளது. எனவே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் இந்த வரி கட்டாயம் பெரிய அளவில் குறைக்கப்படும் ஆனா, ஜீரோவாக இருக்காது என்று தெளிவாகக் கூறினார்.

ஏப்ரல் மாதம் அமெரிக்காவும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்தது மூலம் பங்குச்சந்தை முதல் உள்ளூர் சந்தை வரையில் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளியாக டிரம்ப்-ன் பேச்சு அமைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு அறிக்கையில், சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனா, இந்த வரி அனைத்து பொருட்களுக்கும் இல்லை, ஏற்கனவே வரி விதிக்கப்பட்ட சில பொருட்களின் மீது இந்த 145 சதவீதம் ரெசிப்ரோக்கல் வரி விதிக்கப்பட்டதால் 245 சதவீதமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டார். "அமெரிக்கா சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ரொம்ப 'நைஸ்' ஆக இருக்கிறது. ஒரு ஒப்பந்தம் செய்தா போதும், வரிகள் குறையும்," என்று அவர் உறுதியாகச் சொல்லியிருக்கிறார் டிரம்ப்.

இது, சீனாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்திருந்த கடுமையான நிலைப்பாட்டிலிருந்து அந்தர் பல்டி அடித்துள்ளதைக் காட்டுகிறது. கடந்த சில மாதங்களாக, அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பெரும் சரிவே இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவும் சீனாவும் உலகின் மிகப் பெரிய இரண்டு பொருளாதார நாடுகள் என்பது தெரியும், இதில் சீனா சப்ளையர், அமெரிக்கா கன்ஸ்யூமர். இப்படியிருக்கையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் வர்த்தகப் போர் என்றால் இரு நாடுகளுக்குமே பெரும் பிரச்சனை.

இதேபோல் சீனா உடன் தற்போது அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா, தைவான், என பல நாடுகள் பல்வேறு விதமாக எதிர்ப்பு காட்டி வரும் வேளையில் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்பு, பொருட்களின் விலை உயர்வு, பங்குச் சந்தைகளைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் டிரம்ப் காட்டியுள்ள பச்சை கொடி மூலம் சீனா பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது. இதன் மூலம் வெற்றிகரமாக அமெரிக்கா - சீனா மத்தியில் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டால் தற்போதைய நிலைமை முற்றிலும் மாறும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கை.

இப்போ, டிரம்ப் ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கு வழிவகுக்க முயற்சிக்கிறார். இது, அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஒரு நிலையான சூழலை உருவாக்குவதோடு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் எப்போ உருவாகுமென்று தெளிவா தெரியல, ஆனா ட்ரம்போட இந்த மென்மையான அணுகுமுறை, வர்த்தக பதற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கு என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கும்.

இந்த மாற்றங்கள், இந்தியாவுக்கும், குறிப்பா தமிழ்நாட்டுக்கும் முக்கியமானவை. தமிழ்நாடு, இந்தியாவின் முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையங்களில் ஒன்று. சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் இருக்கும் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், மற்றும் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளோடு நெருக்கமாக இணைஞ்சிருக்கு. அமெரிக்கா-சீனா வர்த்தக பதற்றம் குறைந்தால், இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்து, தமிழ்நாட்டு தொழிற்சாலைகளின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஒரு பெரிய பூஸ்ட்டாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+