அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் விரைவில் 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரெசிப்ரோக்கல் வரி அச்சம் இருக்கும் வேளையில் டிரம்ப்-ன் இந்த புதிய வரி விதிப்பு பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டினார். பிரிக்ஸ் நாடுகளின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு எதிராக உள்ளதாக விமர்சனம் செய்தார்.

இந்த அறிவிப்பு, உலகளாவிய வர்த்தகத்தில் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது, குறிப்பாக இந்தியாவுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், "பிரிக்ஸ் கூட்டமைப்பு, அமெரிக்க டாலரை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்தியா உட்பட, இந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் விதிவிலக்கு இல்லாமல் 10% வரி செலுத்த வேண்டும்," என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறினார். இந்த அறிவிப்பு, டிரம்ப் திங்கட்கிழமை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்த வரி உடனடியாக அமலுக்கு வராது, மாறாக, பிரிக்ஸ் நாடுகள் "அமெரிக்க எதிர்ப்பு" கொள்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும். இத்தகைய அறிவிப்பை டிரம்ப் ஆட்சிக்கு வந்த சில வாரத்திலேயே அறிவித்தார், மேலும் அப்போது எந்த அளவுக்கு வரி விதிக்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. மேலும் இந்தியா தரப்பில் இருந்து பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளது. மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கவும், பிரிக்ஸ் நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது இந்த கூட்டமைப்பாகும்.
இந்தியா, அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளியாக இருந்தாலும், டிரம்பின் இந்த அறிவிப்பு, இந்தியாவை விதிவிலக்கு இல்லாமல் குறிவைப்பதாக உள்ளது. இந்த வரி விதிப்பு, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களான மருந்துகள், தொழில்நுட்ப உபகரணங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் ஜவுளி பொருட்களை பாதிக்கலாம். ஏற்கனவே ரெசிப்ரோக்கல் வரி விதிப்பில் இந்தியாவுக்கு டிரம்ப் 26 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ள வேளையில் தற்போது பிரிக்ஸ் நாடுகள் மீதான 10 சதவீதம் வரி என்ற வகையில் மொத்தம் 36 சதவீத வரி இந்திய பொருட்களுக்கும், சேவைகள் மீது விதிக்கப்படலாம்.
இந்த வரியில் இருந்த தப்ப இந்தியா - அமெரிக்கா உடன் ஜூலை 9ஆம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் டிரம்ப் கடைசியாக கொடுத்த நீட்டிப்பின் படி ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் செய்தாக வேண்டும். இல்லையெனில் 26 சதவீதம் வரி நடைமுறைக்கு வரும்.
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில், டொனால்ட் டிரம்பின் வர்த்தக நடவடிக்கைகளை உலக பொருளாதார வளளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக விமர்சித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டு 24 மணிநேரத்தில் டிரம்ப் 10 சதவீத அறிவிப்பை விடுத்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications