டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ள நிலையில், ஈரான் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளை பீதி அடைய செய்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்களை அழிப்போம் என்று டிரம்ப் கூறியதற்கு பதிலடியாக, ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகம்மது பாகர் கலீபாஃப் மற்றும் IRGC (இஸ்லாமிய புரட்சிகர காவல்படை) ஆகியோர் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

டிரம்பின் அச்சுறுத்தல்
டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்களை 'முற்றிலும் அழிப்போம்' என்று கூறினார். உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்வதால், இது உலக பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஈரானின் கடும் பதில்
ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகம்மது பாகர் கலீபாஃப் ஞாயிற்றுக்கிழமை X தளத்தில் வெளியிட்ட பதிவில், 'எங்கள் நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி, எண்ணெய் வசதிகள் நாட்டின் அதிகாரப்பூர்வ இலக்குகளாகக் அறிவிக்கப்ப்டடு தாக்கப்படும்.

மேலும் அமெரிக்கா ஈரான் மின் நிலையங்களை தாக்கினால் ஈரான் பட்டியலிட்டுள்ள இந்த புதிய டார்கெட்களை மீட்க முடியாத அளவுக்கு அழிக்கப்படும் என்று எச்சரித்தார். இதனால் எண்ணெய் விலை நீண்ட காலத்திற்கு உயர்ந்து விடும் என்றும் அவர் கூறினார்.

ஈரானின் இந்த பதில் எச்சரிக்கை அமெரிக்கா- வளைகுடா நாடுகளுக்கு மட்டுமானது இல்லை ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கானது.

IRGC-யின் கடும் அறிவிப்பு
ஈரானின் உயர்மட்ட ராணுவ அமைப்பான IRGC தனது அறிக்கையில், அமெரிக்கா ஈரானின் எரிசக்தி வசதிகளை தாக்கினால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடிவிடுவோம் என்று எச்சரித்துள்ளது.

அமெரிக்க பங்குகளை வைத்துள்ள வளைகுடா நிறுவனங்கள் 'முற்றிலும் அழிக்கப்படும்' என்றும், அமெரிக்க தளங்கள் உள்ள நாடுகளின் எரிசக்தி வசதிகள் 'சட்டபூர்வ இலக்குகள்' அறிவிக்கப்பட்டு தாக்கப்படும் என்றும் IRGC எச்சரித்தது.

உலக எரிசக்தி சந்தைக்கு பெரும் அச்சுறுத்தல்
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எரிசக்தி பாதையாகும். இது மூடப்பட்டால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் உலக அளவில் எண்ணெய் விலை பெருமளவு உயரும் அபாயம் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதை பெரிதும் சார்ந்துள்ளன.

இரு தரப்பும் எச்சரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், போர் மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளது. இது உலக பொருளாதாரத்திற்கு, குறிப்பாக எரிசக்தி சார்ந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக உருவெடுக்கலாம். சாதாரண மக்களுக்கு எரிசக்தி விலை உயர்வு மூலம் பொருளாதார சுமை அதிகரிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+