உலகையே கட்டியாளப்போகும் ஏஐ தொழில்நுட்ப துறையில் இந்தியாவைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் இல்லாத நிலையில், இந்திய நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கான டேட்டா சென்டரை அமைக்கும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபரான டிரம்ப், என்விடியா ஜென்சன் ஹுவாங் - சீன பெண் உளவாளியுடனான உறவு விவகாரத்தை தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் டேட்டா சென்டர் அமைத்தால் பெரும் வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இந்த ஒரு அறிவிப்பு மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஏஐ மற்றும் கிளவுட் கம்பியூட்டிங் ஹப் கனவுக்கு பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.
சமீபத்தில் தான் மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள் போன்றவை இந்தியாவில் பெரியளவிலான டேட்டா சென்டர் அமைப்பும் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 10-20 பில்லியன் டாலர் முதலீட்டை கொட்டி அமைக்கப்படும் டேட்டா சென்டர் மூலம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஆசிய சந்தை முழுவதற்கும் சேவை அளிக்கத் திட்டமிட்டு இருந்து.
இதேவேளையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டேட்டா சென்டர் அமைப்பதில் இந்தியா மிகவும் விருப்பமான இடமாக இருந்த நிலையில் தற்போது டிரம்ப் அறிவித்துள்ள tremendous tax வரி எச்சரிக்கை இத்துறையை தலைகீழாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளிநாட்டில் அமெரிக்க நிறுவனங்களால் அமைக்கப்படும் டேட்டா சென்டர்களை சீனா நிறுவனங்கள் எளிதாகக் கைப்பற்றிவிடும், இதன் மூலம் சீனா எளிதாக அமெரிக்காவின் கம்பியூட்டிங் பவரை கைப்பற்றி தனது சொந்த ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது என விளக்கம் கொடுத்தார்.
ஒவ்வொரு டேட்டா சென்டரும் தற்போது அமெரிக்கா சீனாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள என்விடியா ஜிபியு-வை பயன்படுத்திக் கொண்டு இயங்கி வருகிறது. இவை ஏஐ மாடல்களை பயிற்றுவிக்கவும், இயக்கவும் பயன்படுத்துகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் டேட்டா சென்டர்களை சீன நிறுவனங்கள் வாங்கியோ, வாடகைக்கு எடுத்தோ தனது ஏஐ மாடல்களை டிரைனிங் செய்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
என்விடியா சிப்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டு உள்ள வேளையில் இதுதான் அவர்களுக்கான வழி என டிரம்ப் அரசு நம்புகிறது, இதனால் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் டேட்டா சென்டர் அமைக்க வேண்டாம் என டிரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த loophole-ஐ மூட வேண்டும் ென டிரம்ப் அரசு முயற்சி செய்து வருவதன் விளைவாக tremendous tax விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications