சர்வதேச பொருளாதாரத்தையும், வர்த்தக சந்தையை புரட்டிப்போட்டு வரும் டிரம்ப, ஜனவரி 21ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திர கூட்டத்தில் பேச உள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் மீது வரி, கிரீன்லாந்து கைப்பற்றும் திட்டம், வெனிசுலா கச்சா எண்ணெய் மீது கன்ட்ரோல் என பல முக்கியமான விஷயங்கள் நடந்து வரும் வேளையில் காசா நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைதி வாரியம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதற்கு மத்தியில் 7 இந்திய நிறுவனங்களின் சிஇஓ-களை சந்தித்து பேச உள்ளார் டிரம்ப்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுடன் சிறப்பு சந்திப்பு நடத்த உள்ளார். இந்த சந்திப்புக்கு இந்தியாவில் இருந்து வெறும் 7 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள உள்ளனர்.
இந்த சந்திப்பில் பங்கேற்கும் இந்திய தலைவர்களில் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், பார்தி என்டர்பிரைசஸ் தலைவர் சுனில் பார்தி மிட்டல், விப்ரோ CEO ஸ்ரீனி பள்ளியா, இன்போசிஸ் CEO சலில் பரேக், மஹிந்திரா குழும CEO அனிஷ் ஷா, பஜாஜ் ஃபின்சர்வ் தலைவர் சஞ்சீவ் பஜாஜ், ஜுபிலன்ட் பார்தியா குழும இணைத் தலைவர் ஹரி பார்தியா ஆகியோர் அடங்குவர்.
இந்த சந்திப்பு டிரம்ப்பின் அமெரிக்க கொள்கைகளை வலியுறுத்தும் நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.
மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரல்ஹாத் ஜோஷி உள்ளிட்டோர் தலைமையிலான இந்திய குழு பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து முதலீடு ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தனித்தனியாக முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த கூட்டம் உலகளாவிய பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு குறித்து முக்கிய விவாதங்களை நடத்தும் மேடையாக அமைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications