இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே பல பதட்டங்கள் இருக்கின்றன. இந்த நிலையை சமாளிக்க அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு போர் நிறுத்த முயற்சி எடுத்திருந்தார். ஆனால் அந்த முயற்சி வெற்றி அடையாமல் போனது. இது குறித்து தற்போது பலர் சமூக ஊடகங்களில் கிண்டலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியின் கிண்டல் கருத்து: பெங்களூருவைச் சேர்ந்த மூத்த இருதய நிபுணர் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி, டிரம்பின் முயற்சிக்கு கிண்டலாக 'X' இல் ஒரு கருத்து பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் ஒரு நல்ல நாடு என்று ட்ரம்ப் நம்பினால், அவர் எலான் மஸ்க்கை பாகிஸ்தானில் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்க சொல்லட்டும்! என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து இணையத்தில் வேகமாக பரவியது. பொதுமக்கள் பலரும் இதை வேடிக்கை பார்வையில் பார்த்து, தங்களது கிண்டல் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் மக்கள் விமர்சனம்: செல்ஃப் டிரைவிங் (தானாக ஓடும்) கார் முதல் தானாக வெடிக்கும் கார் வரை எல்லாம் பாகிஸ்தானில் உருவாகும் என்றும் ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். இன்னொருவர் தொழிற்சாலை திறக்கும் முன் எல்லாம் கொள்ளையடிக்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார். இது சரியான நேரம் அமெரிக்காவுக்கு இலவச குடியேற்ற அனுமதி கொடுக்க என்றும் மற்றொருவர் பதிவிட்டுள்ளனர்.
ட்ரம்பின் போர் நிறுத்த முயற்சி: சனிக்கிழமை அன்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் வலைதளத்தில் ஒரு பதிவிட்டார். அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான், அமெரிக்கா எடுத்த நடு நிலையான முயற்சிக்குப் பிறகு உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்று கூறினார். இதனால் 4 நாட்களாக நடந்துக் கொண்டிருந்த கனமான துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்திக்கு பின்னர் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் தனது டிஜிஎம்ஓவின் வாயிலாக இந்திய சம தரப்பினரை அழைத்து, மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ஏற்கிறோம் என்று தெரிவித்தது.
அதே நாளில், பாகிஸ்தான் தனது போர்நிறுத்த வாக்குறுதியை மீறியது. ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன. பாரமுல்லாவில் சந்தேகத்திற்க்கு இடையான ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டன. ஸ்ரீநகர், பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டது. இதைக் காணும் மக்கள் பயந்து விட்டனர். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், ஸ்ரீநகரில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்கிறது. வான் பாதுகாப்பு பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது போர் நிறுத்தமா? என்று கேட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் முயன்ற போர் நிறுத்த முயற்சி வெற்றி அடையவில்லை. பாகிஸ்தான் தனது வாக்குறுதியை மீறியது. இதை சமூக வலைதளங்களில் மக்கள் பரபரப்பாக விவாதித்து, நகைச்சுவையோடு விமர்சித்து வருகின்றனர். டெஸ்லா தொழிற்சாலை குறித்த கிண்டல்கள், உண்மையில் இன்று உலகம் எப்படி இந்த விஷயங்களை பார்க்கிறது என்பதை காட்டுகின்றன.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications