அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் குடியேற்ற கொள்கையை மறுசீரமைக்கும் நோக்குடன் ஒரு பெரிய முடிவை அறிவித்துள்ளார். தனது நிர்வாகம் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் குடியேற்றத்தை நிரந்தரமாக நிறுத்துவதற்கு உடனடியாக பணியாற்றும் என்று தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்காவின் உள்நாட்டு அமைப்பை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் கண்டிருந்தாலும், தற்போதைய குடியேற்ற கொள்கைகள் அந்த gains-ஐ குறைமதிப்புக்கு உட்படுத்தி, பல குடிமக்களின் வாழ்க்கை தரத்தை வீழ்த்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதை சரிசெய்ய தனது நிர்வாகம் மேற்கொள்ளவிருக்கும் சில விரிவான திட்டங்களையும் டிரம்ப் பட்டியலிட்டுள்ளார்.

சட்டவிரோத வருகைக்கு முற்றுப்புள்ளி : பைடன் ஆட்சிக் காலத்தில் "ஆட்டோபென் (Autopen) மூலம் கையெழுத்திடப்பட்டவை" உட்பட, மில்லியன் கணக்கான சட்டவிரோத அனுமதிகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு பயனற்றவர்கள் நீக்கம் : அமெரிக்காவுக்கு ஒரு சொத்தாக இல்லாதவர்கள் அல்லது நாட்டின் மீது அன்பு செலுத்த திறமையற்றவர்கள் என தீர்மானிக்கப்படும் எவரையும் அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வெளிநாட்டவருக்கு நிதி தடை : அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் அனைத்து மானியங்கள் மற்றும் நலத் திட்டப் பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடுகடத்தல் : உள்நாட்டு அமைதியை சீர்குலைப்பதாக கருதப்படும் புலம்பெயர்ந்தோரின் குடியுரிமைகள் ரத்து செய்யப்படுவதுடன், பொதுச் சுமையாக உள்ள, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அல்லது மேற்கத்திய நாகரிகத்துடன் ஒத்துப் போகாத எந்தவொரு வெளிநாட்டவரையும் நாடு கடத்தப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இத்தகைய முயற்சிகள் மூலம், சட்டவிரோத மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் மக்கள் தொகையில் ஒரு பெரிய குறைப்பை கொண்டுவர முடியும் என்றும், மாற்றுக் குடியேற்றம் மட்டுமே இந்தச் சூழ்நிலைக்கு முழுமையான தீர்வாகும் என்றும் டிரம்ப் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை அருகே தாக்குதல் :இந்த அதிரடி அறிவிப்பு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, வெள்ளை மாளிகைக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் சுடப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர் ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டவர் என்று விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, டிரம்ப் தனது அறிவிப்பில், பிடென் நிர்வாகத்தில் நடந்த குடியேற்ற சோதனைகளின் தோல்வியையே இதற்கு காரணம் என்று சாடினார்.
குடியேற்ற கொள்கை மறுஆய்வு : இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டிரம்ப் அதிகாரிகள் உடனடியாக குடியேற்ற கொள்கைகளை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டனர். பிடென் நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து ஆசிரய வழக்குகளையும், 19 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கிரீன் கார்டுகளையும் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் முழுமையாக ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது.
நன்றி தெரிவிக்கும் செய்தியில் கடும் விமர்சனம் : டிரம்ப் தனது பதிவின் முடிவில், தனது கடுமையான நிலைப்பாட்டை குறிக்கும் வகையில் நன்றி தெரிவிக்கும் செய்தியை வெளியிட்டார். அதில், அமெரிக்கா எதற்காக நிற்கிறதோ, அதை வெறுப்பவர்கள், திருடுபவர்கள், கொலை செய்பவர்கள் மற்றும் அழிப்பவர்கள் தவிர அனைவருக்கும் இனிய நன்றி தெரிவிக்கும் நாள் வாழ்த்துகள்.. நீங்கள் இங்கு நீண்ட காலம் இருக்க மாட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications