அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்துவோம் என்று எச்சரித்துள்ளார். ஈரான் இன்று கடுமையாக தாக்கப்படும் என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களால் ஈரான் சிதைந்துள்ளதாகவும், ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி தாக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவு
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், "இன்று ஈரான் கடுமையாக தாக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார். முன்பு டார்கெட் செய்யப்படாத பகுதிகள் மற்றும் போராட்ட குழுக்களை இப்போது முழுமையாக அழிக்க வேண்டிய சூழல் உள்ளது என்று தனது பதிவில் கூறியுள்ளார். இது ஈரானுக்கு பெரும் அழிவு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களால் ஈரான் சிதைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் மன்னிப்பு
ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், இனி அண்டை நாட்டை தாக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த உறுதி அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் வந்தது என்று அவர் விளக்கினார். ஈரான் முன்பு மத்திய கிழக்கை ஆள விரும்பியது, ஆனால் இப்போது அது தோல்வியடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஈரான் நாட்டின் அண்டை நாடுகள் "நன்றி அதிபர் டிரம்ப்" என்று கூறியதாகவும், அவர் "யூ ஆர் வெல்கம்" என்று பதிலளித்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் 'தோல்வியாளர்'
ஈரான் இப்போது மத்திய கிழக்கின் 'THE LOSER OF THE MIDDLE EAST' மாறியுள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் இந்த போரில் சரணடையாவிட்டால், இந்த போர் நிலை பல ஆண்டுகள் நீடிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது ஈரானின் ஆதிக்கத்கை முற்றிலும் அழித்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
மொத்தத்தில், டிரம்ப் ஈரான் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்துவோம் என்று அறிவித்துள்ளார். இதனால் இனி வரும் காலத்திலும் மத்திய கிழக்கில் போர் பதற்றம் சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications