வளைகுடா நாடுகளில் நிலவும் அமெரிக்கா - ஈரான் மோதல் சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சொந்த Truth Social என்ற சமுகவலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்து புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் மத்தியிலான சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள கடுமையான வார்த்தைகள், இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது. எற்கனவே டிரம்ப் கருத்துக்களை மொத்தமாக ஈரான் மறுத்து வரும் வேளையில், தற்போது ஈரான் ஒப்பந்தம் செய்துக்கொள்ள கெஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தைக்கு தீவிரமாக முன்வர வேண்டிய நிலைமையில் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். ராணுவ ரீதியாக ஈரான் பலவீனமடைந்துள்ளதாகவும், "மீண்டும் எழும் வாய்ப்பு இல்லை" என்ற கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
டிரம்ப் தனது பதிவில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், மிகவும் வித்தியாசமானவர்கள், விசித்திரமானவர்கள். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய பிச்சை எடுக்காத குறையாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ராணுவ ரீதியாக ஈரான் பலவீனமடைந்துள்ளதாகவும், மீண்டும் எழ வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
மேலும் ஈரான் அதிகாரிகள் வெளிப்படையாக "அமெரிக்காவின் முன்மொழிவை பரிசீலித்து வருகிறோம்" என்று கூறுவது தவறான நிலைப்பாடு என்றும், அவர்கள் உண்மையில் ஒப்பந்தம் செய்ய முனைவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
டிரம்ப் தனது பதிவில், ஈரான் உடனடியாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியது அவசியம் என எச்சரித்துள்ளார். இல்லையெனில், பின்னர் திரும்ப முடியாத நிலை உருவாகும் என்றும், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா முன்வைத்துள்ள சமாதான திட்டத்திற்கான 15 பாயின்ட்களை ஈரான் எச்சரிக்கையுடன் அணுகி வரும் சூழலில், டிரம்பின் இந்த கருத்து பேச்சுவார்த்தை செயல்முறைக்கு புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும்.
அரசியல் வட்டாரங்களை பார்க்கும்போது, இந்த வகையான கடுமையான கருத்துகள் இரு தரப்புகளுக்கிடையேயான நம்பிக்கையை குறைத்து, சமாதான முயற்சிகளை தாமதப்படுத்தும் அபாயம் உள்ளது.
டிரம்பின் இந்த பதிவு, மத்திய கிழக்கில் நிலவும் நிலைமை இன்னும் உறுதியற்றதாக இருப்பதை காட்டுகிறது. சமாதானம் எட்டப்படுமா அல்லது மோதல் மேலும் தீவிரமாகுமா என்பது அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின் மீது அமையும்.
More From GoodReturns

தொடர்கிறது ஈரான் போர்!! நாளை காலை 10 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என அறிவித்த டிரம்ப்!!

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

பெட்ரோல் விலை ரூ.119, டீசல் விலை ரூ.127..!! இந்த மாத கடைசியில் அதிர்ச்சி காத்திருக்கு மக்களே!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications