அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் அந்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று சனிக்கிழமை அறிவித்தார். இது வட அமெரிக்க வர்த்தக உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பு, உலக வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரம்ப், கனடா அதிபர் மார்க் கார்னி தனது நாட்டை சீனாவின் 'டிராப் ஆஃப் போர்ட்' ஆக்க நினைத்தால் அது பெரும் தவறு என்று கூறியுள்ளார். சீனா கனடாவை முழுமையாக அழித்துவிடும் என்றும் எச்சரித்த அவர், இந்த ஒப்பந்தம் கனடாவின் வணிகங்கள், சமூக அமைப்பு மற்றும் பொது வாழ்க்கை முறையை சிதைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

டிரம்ப் ஒருப்பக்கம் ரஷ்யா, சீனாவிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாத்துக்கொள்ள வெனிசுலா, கிரீன்லாந்து நாடுகளை கைப்பற்றி வரும் வேளையில், அமெரிக்காவின் அண்டை நாடான கனடா சீனாவுடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தை செய்ய தயாராகி வருகிறது. இது அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
இந்த நிலையில் தான் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் அந்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
இந்த 100 சதவீத வரி அமலானால், அமெரிக்காவுக்கான கனடாவின் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும். அமெரிக்கா கனடாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி என்பதால், இது இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவை சீர்குலைக்கலாம்.

டிரம்பின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையை வலுப்படுத்துகிறது. சீனாவின் வர்த்தக விரிவாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் டிரம்ப்-ன் அறிவிப்பு உள்ளது. இதுபோன்ற வரி அச்சுறுத்தல்கள், உலக பொருளாதாரத்தில் புதிய சவால்களை உருவாக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பா மீது வரி விதிக்கும் திட்டத்தை டிரம்ப் கைவிடுவதாக அறிவித்த பின்பு முதலீட்டு சந்தை கடந்த 2 நாட்களாக சூடுபிடிக்க துவங்கியிருக்கும் வேளையில், தற்போது கனடா மீதான வரி அச்சுறுத்தல் வந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் முதலீட்டு சந்தையும் பாதிக்கப்படும்.
இதனால் மீண்டும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், காப்பர் போன்ற உலோக சந்தைக்கு கூடுதலான முதலீடுகள் வர வாய்ப்புகள் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications