ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு ராணுவ தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று CNN பேட்டியில் ஈரான் நாட்டின் மீது 'பெரிய அலை தாக்குதல்கள் இன்னும் வரும்' என்று எச்சரித்துள்ளார்.
ஈரான், பிற அரபு நாடுகளை தாக்கியது பெரும் ஆச்சரியம் என்று கூறிய அவர், ஈரான் நாட்டின் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகு அங்கு யார் புதிய தலைவராக வருவார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார். அமெரிக்க வீரர்களை ஈரானுக்கு அனுப்புவதை நிறுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த மோதல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது.

ஈரான் அரசு ஞாயிற்றுக்கிழமை உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது வாரிசு தேர்ந்தெடுக்கப்படும் வரை ஆயத்துல்லா அலிரேஸா அராஃபி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான், புதிய உச்ச தலைவரை தேர்ந்தெடுக்க அறிவுரைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஆயத்துல்லா அலி கமேனி தொடர்ந்து கிட்டத்த 8 மூத்த தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொள்ளப்பட்டு உள்ளனர்.
1000 டார்கெட் அழிப்பு
அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்ற கூட்டு நடவடிக்கையில் முதல் 24 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஜெனரல் டான் கெய்ன் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' திட்டத்தை இஸ்ரேல் முதல் தாக்குதலை செய்து தொடங்கி வேகமாக விரிவடைந்தது. இந்த தாக்குதல்களை மிகவும் திட்டமிட்டு, வேகமாகவும், ஒருங்கிணைந்த நடவடிக்கையாக செயல்படுத்தப்பட்டது என என்று டான் கெய்ன் விளக்கினார்.
இதேதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், அமெரிக்கா போரை தொடங்கவில்லை, ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று கூறியுள்ளார். 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கைப்படி நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவற்றை அழிப்போம் என்று அவர் வலியுறுத்தினார்.
ஈரானின் தாக்குதல்களால் நான்கு அமெரிக்க வீரர் உயிரிழந்துள்ளார் என்று அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் அறிவித்துள்ளது.
ஈரான் பதிலடி
ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) திங்கள்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய 500 இடங்களை தாக்கியதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை தாக்கியதாக IRGC கூறியுள்ளது. இந்த தாக்குதல் தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர். ஈரான் உயர் அதிகாரிகளின் இறப்புக்கு பிறகு நாட்டில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. ஈரான் பாதுகாப்பு அமைச்சராக Sayyed Majid Ebn-Al-Reza நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரான் அரசு ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது இடத்திற்கு அடுத்த நபரை தேர்ந்தெடுக்கப்படும் வரை ஆயத்துல்லா அலிரேஸா அராஃபி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான், புதிய உச்ச தலைவரை தேர்ந்தெடுக்க அறிவுரைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஈரான் அரசு விரைவாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
லெபனான் மீது தாக்குதல்
ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் லெபனான் எல்லை வரை விரிவடைந்துள்ளது. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. லெபனான் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதால் இஸ்ரேல் தெற்கு லெபனானில் இலக்குகளை தாக்கியது.


Click it and Unblock the Notifications