ஒரேயொரு டிவீட், வேலை முடிந்தது..!! அமெரிக்காவுக்கு வெற்றி.. இறங்கி வந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் டிரம்ப், ஜேடி வேன்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மத்தியில் நடந்த சந்திப்பு பெரும் வாக்குவாதத்தில் முடிந்தது மட்டும் அல்லாமல், அமெரிக்க வரலாற்றில் இது கருப்பு புள்ளியாகவும் மாறியது. ஆனால் வார இறுதியில் அனைத்து பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது.

ரஷ்யா தொடர்ந்து எதிர்த்துப் போரிட உக்ரைன்-க்கு அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளின் ஆதரவு வேண்டும். அதேவேளையில் ஜெலென்ஸ்கி தலைமையிலான அரசுக்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்த போரில் உக்ரைன் பக்கம் நிற்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

ஒரேயொரு டிவீட், வேலை முடிந்தது..!! அமெரிக்காவுக்கு வெற்றி.. இறங்கி வந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

இதனிடையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-யின் அமெரிக்கப் பயணத்தில் முக்கியமான விஷயமாக இருந்த, கனிம ஒப்பந்தத்தில் உக்ரைன் அமெரிக்காவுடன் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார், இது "பாதுகாப்பு உத்தரவாதங்களின் முதல் படி" என்றும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து X-இல் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செய்த பதிவில், அமெரிக்க அரசுடன் நாங்கள் கனிம வளம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறோம். இந்த ஒப்பந்தம் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் நடத்தும் போராட்டத்திற்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை நோக்கிய முதல் படியாக இருக்கும். ஆனால் இது உக்ரைன் நாட்டுக்கும், மக்களுக்கும் போதாது, எங்களுக்கு மேலும் சில உத்தரவாதங்கள் வேண்டும்.

அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் போர் நிறுத்தம் செய்வது என்பது உக்ரைனுக்கு மிகவும் ஆபத்தானது. நாங்கள் 3 ஆண்டுகளாக ரஷ்யா-வை எதிர்த்துப் போரிட்டு வருகிறோம், அமெரிக்கா எங்கள் பக்கம் இருப்பதை உக்ரைன் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இதற்கான உத்தரவாதம் எங்களுக்குத் தேவை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் ஜெலென்ஸ்கியின் பதட்டமான சந்திப்பை தொடர்ந்து, அவர் சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஐ சந்தித்தார். இதன் பின்னர் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு மூலம் ஏற்கனவே பெற்ற பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஆதரவை மீண்டும் உறுதி செய்துக்கொண்டார் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. இதேபோல் தற்போது கனிமவள ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவின் ஆதரவையும் பெற உள்ளார். இது கண்டிப்பாக ரஷ்யாவுக்கு பெரும் நெருக்கடியாக அமையும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+