ஆடிய ஆட்டம் என்ன, பேசிய வார்த்தை என்ன.. என்பது போல் டிரம்ப்-ன் செயல்பாடுகள் அனைத்தும் தற்போது திரும்ப அமெரிக்காவையே தாக்குகிறது என்பது தான் தற்போதைய கதையாக உள்ளது. டிரம்ப் தனது முதல் ஆட்சியில் சீனா-வை மட்டும் கட்டம் காட்டி தாக்கிய நிலையில் இது இருநாடுகள் மத்தியிலான வர்த்தக போராக இருந்தது.
ஆனால் இந்த ஆட்சியில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்தும் அனைத்து நாடுகள் மீதும் பதிலுக்கு பதில் வரி விதிக்கப்படும் என முடிவு அமெரிக்காவின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்படைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு சாம்பிள் தான் திங்கட்கிழமை அமெரிக்க பங்குச்சந்தையில் பதிவான ரத்தகளரியான வர்த்தகம், செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் பதிவான பெரும் சரிவும் தான். அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்ற அச்சம் காரணமாக, திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஸ்ட்ரீட் சந்தை 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்தது. இதன் எதிரொலியாகவே ஆசிய சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்தன. இதன் செயின் ரியாக்ஷனாக இந்தியா, ஐரோப்பா, பிரிட்டன் சந்தைகளும் இன்று சரிவை சந்தித்தன.
அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் உலகளாவிய நிதிச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். இதனால் பங்குகளை விற்பனை செய்து பணத்தை கையில் எடுத்து வருகின்றனர். இப்போது தெரிகிறது ஏன் வாரன் பபெட் 300 பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்யாமல் கையில் வைத்திருக்கிறார் என்று.
இன்று இந்திய பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறிய காரணத்தால் இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து சரிவை சந்தித்தது. ஆசியாவின் பிற நாடுகளின் நாணய மதிப்புகளும் இதே காரணத்தால் குறைந்தது அடுத்த சோக கதை.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது, இந்திய பொருட்களின் மீது வரிகளை விதிக்க அமெரிக்க அரசு பரிசீலித்து வருவது முதலீடு சந்தையில் பதற்றத்தை அதிகரித்தது. ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரி அதாவது மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே வரியை அமெரிக்க அரசும் விதித்து பதிலடி கொடுக்க உள்ளது. இதில் இந்தியாவும் இருப்பது தான் தற்போதைய மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
அமெரிக்க பொருட்களின் மீது இந்தியா 9.5% வரியும், இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா 3% வரியும் விதிப்பதால், அமெரிக்காவின் பதிலடி வரிகளால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் அச்சம் உள்ளது. இதேபோல் டிரம்ப் அரசின் வரிக்கு பயந்து சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த நிறுவனங்களுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இப்படி உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராகவும், அமெரிக்காவல் பாதிக்கப்படும் வேளையில் ரெசிஷன் வரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
டிரம்ப் அரசின் இந்த ரெசிப்ரோக்கல் வரி கொள்கைகளால் ஏற்படும் ரெசிஷனுக்கு "Trumpcession" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷன் உலக பொருளாதாரத்தை ஒரு நிச்சயமற்ற தன்மைக்கு தள்ளும் என பொருளாதார வல்லுனர்கள் கணித்து வருகின்றனர்.
டிரம்ப்-ன் சேட்டையால் ஏற்கனவே பல துறைகள், பல நாடுகளில் சீர்குலைந்துள்ளது. இந்த நிலையில் சந்தையின் கணிப்புகள் படி Trumpcession அமெரிக்காவில் ஏற்பட்டால் முதலீட்டு சந்தை தாண்டி, வேலைவாய்ப்பு, மக்களின் வருமானம் என 360 டிகிரியிலும் பிரச்சனை சூழ்ந்துவிடும்.
அமெரிக்க சந்தைகளில் டிரம்ப் வருகை ஒரு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்த நிலையில் தற்போது அச்சமாக மாறியுள்ளது. "Trumpcession" அடுத்த சில மாதத்தில் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, இதனால் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் பயந்து பயந்து முதலீடு செய்தும், பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications