அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் விசா தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பும் ஐடி ஊழியர்கள் தலையில் இடியை இறக்குவது போல் உள்ளது. இதில் முக்கியமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு பெறும் புதிய H-1B விசாவுக்கு 100,000 டாலர் கட்டணம் விதிக்கப்பட்டது மூலம் மொத்த ஐடி சேவை துறையும் தலைகீழாக மாறியுள்ளது.
ஹெச்1பி விசாவை அமெரிக்க நிறுவனங்களும் பயன்படுத்தினாலும் இந்த 1 லட்சம் டாலர் கட்டணம் மூலம் ஐடி அவுட்சோர்சிங் மற்றும் ஸ்டாபிங் நிறுவனங்களுக்கு தான் பெரிய சுமையாக அமையும் என ப்ளூம்பெர்க் ஆய்வுகள் கூறுகிறது.

இந்திய ஐடி சேவை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்போசிஸ், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் ஆகியவை அதிகம் பாதிக்கப்படும் என ப்ளூம்பெர்க் ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த நிறுவனங்கள் மற்ற டெக் நிறுவனங்களை போல் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஊழியர்களை வழங்கும் ஒரு மிடில்மேன் போல செயல்படுகின்றன. இதனால் இந்த நிறுவனத்தின் மூலம் ஹெச்1பி விசா பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
மே 2020 முதல் மே 2024 வரையிலான காலத்தில் இந்த மூன்று நிறுவனங்கள் மூலம் புதிய H-1B விசா பெற்ற ஊழியர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்க தூதரகங்கள் மூலம் (Consular Processing) விசா பெற்றனர். இந்த கட்டணம் அப்போது இருந்திருந்தால் இந்நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் செலவு செய்திருக்க வேண்டியிருக்கும்.
இன்போசிஸில் மொத்த ஹெச்1பி விசா ஊழியர்களில் சுமார் 93 சதவீதம் பேர் புதிதாக ஹெச்1பி விசா பெற்று அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். இது கிட்டத்தட்ட 10,400 ஊழியர்கள் ஆகும். மீதமுள்ள ஊழியர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் தங்கி F1, H4 போன்ற மற்ற விசாக்களில் இருந்து பணியாற்றியவர்கள்.
இதை போல் இப்போது இன்போசிஸ் 10,400 ஊழியர்களுக்கு ஹெச்1பி விசா பெற வேண்டும் என்றால் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் செலவாகியிருக்கும். இதேபோல் TCS-ல் 82 சதவீதம் அதாவது 6,500 ஊழியர்கள், காக்னிசன்டில் 89 சதவீதம் அதாவது 5,600 ஊழியர்கள் 1 லட்சம் டாலர் கட்டணத்தின் மூலம் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என ப்ளூம்பெர்க் ஆய்வுகள் கூறுகிறது.
அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் Change of Status அடிப்படையில் அதிகளவிலான ஊழியர்களை தேர்வு செய்யும் காரணத்தால் இந்த கட்டணம் மூலம் பாதிப்பு குறைவாகவே உள்ளது என ப்ளூம்பெர்க் ஆய்வுகள் கூறுகிறது.
Change of Status vs Consular Processing வித்தியாசம்:
H-1B விசா பெறுவதில் இரு வழிகள் உள்ளன. அமெரிக்காவில் ஏற்கனவே இருக்கும் ஊழியர்கள் Change of Status மூலம் விசா மாற்றலாம். இதற்கு புதிதாக விதிக்கப்பட்ட 100000 டாலர் கட்டணம் இல்லை. ஆனால் அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து வருபவர்கள் Consular Processing மூலம் தூதரகத்தில் விசா பெற வேண்டும். இதற்கு 100,000 டாலர் கட்டணம் பொருந்தும். இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து ஊழியர்களை அனுப்புவதால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
டிரம்ப் கொள்கையின் அடிப்படை நோக்கம் என்வென்றால், இந்த கட்டணம் மூலம் அமெரிக்க ஊழியர்களை பாதுகாக்கவும், வெளிநாட்டு ஊழியர்களை குறைக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் புதிய H-1B விசா கட்டணம் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது. TCS, இன்போசிஸ், காக்னிசன்ட் போன்றவை அதிகம் பாதிக்கப்படும். இது செலவை உயர்த்தி போட்டித்திறனை குறைக்கலாம். இந்திய ஐடி துறை இதை சமாளிக்க புதிய உத்திகளை தேட வருகிறது.
அமெரிக்க வர்த்தகத்தை கைவிட முடியாது, அதேபோல் வெளிநாட்டில் அதிகப்படியான ஊழியர்கள் வேண்டும் என்பதால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அமெரிக்காவின் அண்டை நாடுகளில் அதிகளவிலான முதலீட்டை செய்து ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகிறது. இதோபோல் ஐரோப்பா, வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் வெளிநாட்டில் நிறுவனங்களை கூட வாங்கி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இதேபோல் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எல்1 விசாவை அதிகளவிலும், சிறப்பாகவும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications