அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பால், இந்திய பார்மா தொழில்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அக்டோபர் 1 முதல் அறிமுகப்படுத்தப்படும் பிராண்ட் மருந்துகள் மற்றும் பேட்டண்ட் மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் தனது சமுக வலைத்தள பதிவு மூலம் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கும் என வர்த்தக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் அமெரிக்கா 35 சதவீத பங்கு வகிக்கிறது, 2025 நிதியாண்டில் இதன் மதிப்பு மட்டும் சுமார் 10 பில்லியன் டாலராகும்.
இந்த வரி உயர்வு, பங்கு சந்தையில் சன்ஃபார்மா, சிப்ளா, டாக்டர் ரெட்டிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளை 5 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதோடு நிஃப்டி பார்மா குறையீடு 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 21,390 புள்ளிகள் வரையில் குறைந்தது. தற்போது 2.15 சதவீத சரிவுடன் 21,504.70 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் லார்ஸ் லேப்ஸ் 7 சதவீதம் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து நாட்கே பார்மா, பயோகான் ஆகியவை 4 சதவீத சரிவை எதிர்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப், ஐடி துறையில் H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின், இப்போது பார்மா துறையை டார்கெட் செய்ய துவங்கியுள்ளார். பிராண்ட் மருந்துகளுக்கு விதிக்கப்படும் 100 சதவீத வரி, இந்திய நிறுவனங்களின் லாபத்தை குறைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய பார்மா நிறுவனங்கள் ஐடி நிறுவனங்களை போலவே அதிகப்படியான வர்த்தகத்தை அமெரிக்காவில் வைத்துள்ளது. இந்திய பார்மா நிறுவனங்கள் சுமார் 30 முதல் 47 சதவீத வருமானத்தை அமெரிக்காவை சார்ந்தது உள்ளது. இந்த நிலையில் டிரம்ப்-ன் வரி விதிப்பு பிராண்ட் மருந்துகளுக்கு மட்டுமின்றி சிக்கலான ஜெனரிக் மருந்துகள் மற்றும் சிறப்பு மருந்துகளுக்கும் விதிக்கப்படுவதால் பெரும் இழப்பு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் டிரம்ப் தனது அறிவிப்பில் பார்மா நிறுவனங்கள் அமெரிக்காவில் பார்மா உற்பத்தி தளத்தை அமெரிக்காவில் அமைத்தாலோ அல்லது தொழிற்சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியிருந்தாலோ இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் டிரம்ப் விதித்த கெடு அக்டோபர் 1 ஆம் தேதி என்பதல் இந்த வாய்ப்பை பெறும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டாலும், இந்தியாவின் வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
டாக்டர் ரெட்டிஸ்: இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களில் டாக்டர் ரெட்டிஸ், அமெரிக்காவை சார்ந்த 47 சதவீத வருமானத்தால் மிகவும் பாதிப்படையும் நிலையில் உள்ளது. இது மற்ற சக நிறுவனங்களை விட அதிகம். வர்த்தக நிபுணர்கள் கூறுகையில், டாக்டர் ரெட்டிஸ் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தி நிறுவனங்களை அமைக்க விரைவாக முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
சன் பார்மா: இந்நிறுவனம் அதன் மொத்த வருமானத்தில் சுமார் 37 சதவீத வருமானம் அமெரிக்காவை சார்ந்து உள்ளது. இந்த வரி விதிப்பால் 2026 நிதியாண்டில் 2.1 முதல் 2.3 பில்லியன் டாலர் வரை இழக்கும் அபாயத்தில் உள்ளது. சிறப்பு பிராண்ட் மருந்துகள் மீது வரி உயர்வு, இந்நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்கும். சந்தை நிபுணர்கள், சன்ஃபார்மா போன்ற நிறுவனங்கள் புதிய சந்தைகளை தேடி, ஏற்றுமதி பன்முகப்படுத்தல் செய்ய வேண்டும் என்கின்றனர்.
சிப்லா: மறுபக்கம், சிப்லா நிறுவனம் 30 சதவீத வருமானம் அமெரிக்காவை சார்ந்து உள்ளது, 2026-2027 நிதியாண்டில் 900 முதல் 950 மில்லியன் டாலர் வரை மட்டுமே பாதிப்படையும். இது மற்ற நிறுவனங்களை விட குறைந்த அளவு. சிப்லாவின் ஜெனரிக் மருந்து சார்ந்த உற்பத்தி, வரி உயர்வின் தாக்கத்தை சமாளிக்க உதவும். சந்தை நிபுணர்கள், மற்ற நிறுவனங்களை காட்டிலும் இந்நிறுவனத்தை ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.
மற்ற நிறுவனங்களின் நிலைமை
- லூபின் நிறுவனம், 2026 நிதியாண்டில் 1.1 பில்லியன் டாலர் அமெரிக்க வருமான பங்கீட்டை கொண்டு உள்ளது, இதில் அமெரிக்க உற்பத்தி தளங்கள் மூலம் 70-80 மில்லியன் டாலர் பங்கீட்டை கொண்டு உள்ளது.
- ஜைடஸ் லைஃப்சயின்ஸஸ், 1.3 பில்லியன் டாலர் அமெரிக்க வருமானத்துடன், அமெரிக்க உற்பத்தி இல்லாததால் அதிக அபாயத்தை எதிர்நோக்க உள்ளது.
- அரபிந்தோ, 2024 காலண்டர் ஆண்டில் 1.6 பில்லியன் டாலர் அமெரிக்க வர்த்தகத்தை கொண்டு உள்ளது. இதோடு மூன்று அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களைக் கொண்டாலும், அவற்றின் உற்பத்தி மற்றும் வர்த்தக பங்களிப்பு குறைவு.
- கிளென்மார்க், 393-461 மில்லியன் டாலர் அமெரிக்க வருமானத்துடன் இருக்கிறது. இதோடு அமெரிக்க அரசின் வரி அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.
- கிளாண்ட் ஃபார்மா, 372-393 மில்லியன் டாலர் வருமானத்துடனும், ஆல்கெம், 336-372 மில்லியன் டாலர் வருவமானத்துடனும், டொரன்ட் ஃபார்மா 141-156 மில்லியன் டாலர் வர்த்தகத்துடனும் உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications