அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் திரைப்படத் துறையைப் பாதுகாக்கவும், உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் வெளியிடப்பட்டதாக டிரம்ப்-ன் சொந்த சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியுள்ளார். இதற்கு பின்னாலும் சீனா உள்ளது என்பது தான் முக்கியமான விஷயம்.
அமெரிக்க திரைப்படங்களுக்கு சீனா முக்கியமான சந்தையாக இருக்கும் வேளையில், சில மாதங்களுக்கு முன்பு சீனா அரசு, அந்நாட்டிற்கு வெளியிடப்படும் ஹாலிவுட் திரைப்படங்களின் எண்ணிக்கையை குறைந்தது. இது அமெரிக்க திரைப்பட துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. Disney, Paramount, Warner Bros போன்றவை இன்னும் கொரோனா தொற்று காலத்தில் இருந்த பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

டிரம்ப்-ன் இந்த 100 சதவீத வரி முடிவு இந்தியத் திரைப்படத் துறையை, குறிப்பாக கோலிவுட், பாலிவுட், டோலிவுட் மற்றும் பிற மொழித் திரைப்படங்களை பெரிதும் பாதிக்கும். இதன் தாக்கங்களை விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்காவில் வெளியிடப்படுகின்றன. இந்தப் புதிய 100% வரி காரணமாக, இந்தியத் திரைப்படங்களை அமெரிக்காவில் விநியோகிக்கும் செலவு இரட்டிப்பாகும்.
உதாரணமாக, ஒரு திரைப்படத்தை 1 மில்லியன் டாலர் செலவில் வாங்கி வெளியிடுவதற்கு, இனி கூடுதலாக 1 மில்லியன் டாலர் வரியாக செலுத்த வேண்டும். இதனால், விநியோகஸ்தர்களுக்கு நிதி சுமை அதிகரிக்கும், மேலும் பல திரைப்படங்கள் அமெரிக்காவில் வெளியிடப்படாமல் போகலாம் அல்லது டிக்கெட் விலை உயர்த்தப்படலாம்.
தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் பிற மொழித் திரைப்படங்கள் அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுகின்றன. இந்த வரி காரணமாக, வெளிநாட்டு சந்தைகளில் இருந்து வரும் வருவாய் குறையலாம், இது தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி தளங்கள் இந்தியத் திரைப்படங்களை அமெரிக்காவில் ஸ்ட்ரீமிங் செய்கின்றன. இந்த வரி ஓடிடி தளங்களுக்கும் பொருந்துமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், இந்த வரி ஸ்ட்ரீமிங் கன்டென்ட்-க்கும் விதிக்கப்பட்டால், இந்தியத் திரைப்படங்களை வாங்குவதற்கு இந்த தளங்கள் தயங்கலாம். இதனால், இந்தியத் திரைப்படங்களின் உலகளாவிய பார்வையை பெறுவது குறையும். மேலும் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய சந்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.
இந்த வரி அறிவிப்பு, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தலாம். ஏற்கனவே டிரம்ப் விதித்த ரெசிப்ரோக்கல் வரி விதிப்பின் தாக்கம் சந்தையில் கொதித்து வரும் வேளையில் தற்போது டிரம்ப் நிர்வாகம் துறை வாரியாக விரிகளை விதிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, ட்ரம்ப் இந்தியாவின் வாகன இறக்குமதிகளுக்கு 100% வரியை விதித்ததாக குறிப்பிட்டுள்ளார், மேலும் இந்தியாவை "Tax king" என்று விமர்சித்துள்ளார். இந்த புதிய திரைப்பட வரி, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை பதிலடி வரி கொடுக்க தூண்டலாம்.
உதாரணமாக, இந்தியா, அமெரிக்கத் திரைப்படங்களுக்கு இதேபோன்ற வரியை விதித்தால், ஹாலிவுட் திரைப்படங்களின் இந்திய சந்தை பாதிக்கப்படலாம். இது உலகளாவிய திரைப்பட வர்த்தகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிப்பதாக டிரம்ப் முடிவு செய்துள்ள நிலையில், இது அமெரிக்க நிறுவனங்களையும் பாதிக்கும். காரணம் பெரும்பாலான அமெரிக்க திரைப்படங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் வெளிநாட்டில் குறைவான செலவு, ஊழியர்கள் சம்பளம் குறைவு, அனைத்தையும் விட படத்திற்கான சிறந்த லொக்கேஷன் ஆகியவை அமெரிக்காவை தாண்டில் வெளிநாடுகளில் மிகவும் சாதகமாக உள்ளது.
இப்படியிருக்கையில் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அமெரிக்க திரைப்படங்களுக்கும் இந்த வரி பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications