அமெரிக்காவின் H-1B விசா தான் இந்திய ஐடி ஊழியர்களின் American Dream-ன் துருப்பு சீட்டாக இருந்தது. ஆனால் டிரம்ப்-ன் உத்தரவு இந்திய மக்களின் கனவை உடைக்கும் வண்ணமாக உள்ளது.
டிரம்ப் நிர்வாகம் செப்டம்பர் 19, 2025 அன்று வெளியிட்ட உத்தரவில் ஒவ்வொரு H-1B தொழிலாளருக்கும் ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அமெரிக்க நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணம் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது செப்டம்பர் 21க்கு பின்பு புது ஹெச்1பி விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமல்லாமல், ரினிவல் செய்யப்படும் ஹெச்1பி விசா-க்களுக்கும் பொருந்தும் என்பதால் பல கோடி இந்திய ஐடி ஊழியர்களின் கனவு நொறுங்கியுள்ளது.
H-1B விசா மூலம் அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்காவில் இயங்கி வரும் பிற நாட்டு நிறுவனங்களும் திறமையான ஊழியர்களை தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற வைக்க உதவுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதிகளவில் விசா பெறுவது அமெரிக்க நிறுவனங்கும், இந்திய நிறுவனங்கள் தான்.
அதேபோல் ஹெச்1பி விசா பெறும் நாட்டவர் என்றால் இந்தியர்கள் தான், 2024ஆம் ஆண்டு தரவுகளின் படி சுமார் 77 சதவீத விசாக்களை இந்தியர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 11 சதவீதம் பேர் சீன நாட்டவர்கள் பெற்றுள்ளனர்.

டிரம்ப்-ன் முதல் ஆட்சி முறையிலும் சரி, தற்போதைய 2வது ஆட்சியிலும் சரி விசா வழங்கும் முறையை மாற்றுவதில் தீவிரமாக உள்ளார். இதன் அடிப்படையில் தான் ஒரு விசாவுக்கு 1 லட்சம் டாலர் எனவும், இதை செப்டம்பர் 21ஆம் தேதி முதலே நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்து அதிகாரப்பூர்வ உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளார் டிரம்ப்.
சரி தற்போதைய முக்கியமான கேள்வி என்னவென்றால் இந்த 1 லட்சம் டாலர் கட்டணத்தை யார் செலுத்த வேண்டும் என்பது தான்.?
அமெரிக்க சட்டப்படி, இந்த விசா விண்ணப்பங்களின் அனைத்து கட்டணங்களையும் ஸ்பான்சரிங் நிறுவனமே செலுத்த வேண்டும், ஊழியர்கள் இதை ஏற்க கூடாது என்பது தான் விதி. அதாவது எந்த நிறுவனம் ஒரு வெளிநாட்டவருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறதோ, அதே நிறுவனம் தான் மொத்த கட்டணத்தையும் ஏற்க வேண்டும்.
அப்படி நிறுவனம் செலுத்த வேண்டிய கட்டணங்களின் பட்டியல்: உள்ளூர் தொழிலாளர் நிலைப் பயன்பாடு (LCA) தாக்கல் கட்டணம், I-129 பெடிஷன் மற்றும் பிற நிர்வாக அல்லது சட்டச் செலவுகளும் இதில் அடங்கும். இதுதவிர, பிரீமியம் ப்ராசஸிங் போன்ற விருப்ப சேவைகளுக்கு மட்டுமே ஊழியர்கள் செலுத்தலாம்.
இந்த கட்டமைப்பு மூலம், திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் நிதி சுமையை இல்லாமல் அமெரிக்காவில் வேலை செய்ய உதவுகிறது, ஆனால் இப்போது 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளதால் நிலைமை தலைகீழாக மாறலாம். இந்த உத்தரவில் H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன் இந்தக் கட்டணத்தை நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறது. இதனால் ஹெச்1பி விசா ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் தான் 1 லட்சம் டாலர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.
இதனால் 2 விஷயங்கள் நடக்கும். 1. அமெரிக்க நிறுவனங்கள் தற்போது சமர்பித்துள்ள ஹெச்1பி விசா விண்ணப்பங்களை திரும்ப பெறலாம், அதேபோல் புதிய விசா விண்ணப்பம் சமர்ப்பிப்பதை நிறுத்தும். 2. இனி வெளிநாட்டு ஊழியர்களின் வரவு அமெரிக்காவுக்கு குறையும், இது ஒரு முறை கட்டணம் இல்லை, ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய கட்டணம் என்பதால் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதை நிறுத்தலாம்.

தற்போதைய H-1B விசா கட்டணம்
தற்போது, H-1B விசா பெறுவதற்கான கட்டணங்கள் நிறுவனங்களுக்கு ஏற்கனவே சுமையாக உள்ளன. H-1B லாட்டரி (விண்ணப்பத் தேர்வு) பதிவுக்கு 215 டாலர்கள் செலுத்த வேண்டும், அதன் பின் I-129 ஃபார்ம் தாக்கலுக்கு 780 டாலர்கள்.
மேலும், நிறுவனத்தின் அளவு, ஊழியர் எண்ணிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்து 1,000 முதல் 2,500 டாலர்கள் வரையிலான பைலிங் கட்டணங்கள் உள்ளன. இவை அனைத்தும் நிறுவனங்களின் வணிகச் செலவாகக் கருதப்படுகின்றன, இதில் ஊழியர்களுக்கு எந்தப் சுமையும் இல்லை. விரைவு செயலாக்கம் (எக்ஸ்பெடைட் ப்ராசஸிங்) தேர்ந்தெடுத்தால், கூடுதல் 2,500 டாலர்கள் வரை செலவாகலாம்.
ஆனால் டிரம்ப் உத்தரவின்படி, 1 லட்சம் டாலர் கூடுதல் கட்டணம் மேலே குறிப்பிட்டவைக்கு மேல் வரும். இதனால் சிறிய நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்திக்கும்.
அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்களின்படி, இந்தக் கட்டணம் அமெரிக்க அரசுக்கு 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் வருவாய் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications