அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புகளை காப்பாற்ற வேண்டும் என்ற இலக்குடனும், வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் செல்லக்கூடாது இதேவேளையில் மிகுந்த திறன் வாய்ந்தவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் மட்டுமே ஹெச்1பி விசா பெற வேண்டும் என இலக்குடன் டிரம்ப் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 100000 டாலர் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளார் டிரம்ப்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
H-1B விசா என்றால் என்ன?: H-1B விசா, அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் திறமையான தொழிலாளர்களை பணியில் நியமிக்க ஒரு வேலைவாய்ப்பு விசா. இந்த விசா மூலம் விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள், சாப்ட்வேர் டெவலப்பர்கள் போன்ற சிறப்புத் திறன் உள்ளவர்களுக்கு முதலில் மூன்று ஆண்டுகள் வரை வேலை செய்யும் உரிமை அளிக்கும், இது ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.
இந்த விசா முறை 1990-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, ஆண்டுக்கு 85,000 விசாக்களை லாட்டரி முறையில் விநியோகிக்கிறது அமெரிக்க அரசு. இது அமெரிக்க நிறுவனங்களுக்கு உலகளாவில் இருக்கும் திறமையான ஊழியர்களை பணியில் அமர்த்த உதவுகிறது, ஆனால் இப்போது விதிக்கப்பட்ட கட்டணத்தால் ஹெச்1பி விசா பெறுவோர் எண்ணிக்கை குறையலாம்.

H-1B விசா கட்டண உயர்வின் தொடக்க தேதி: வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிடப்பட்ட அதிபர் கையெழுத்திட்ட அறிவிப்பின் அடிப்படையில், H-1B விசா தொடர்பான புதிய விதிமுறைகள் செப்டம்பர் 21, 2025 அன்று அமலுக்கு வரும். இந்த மாற்றம் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு இதன் மூலம் பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளது.
1 லட்சம் டாலர் கட்டணம்: புதிய விதிமுறைகள்: "Restriction on Entry of Certain Nonimmigrant Workers" என்ற தலைப்பில் வெளியான அமெரிக்க அரசின் அறிவிப்பில், H-1B விண்ணப்பங்கள் ஏற்க வேண்டுமாயின் 1 லட்சம் டாலர் செலுத்த வேண்டும், இந்தக் கட்டணம் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிரம்ப் என்ன கூறினார்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H-1B முறையை தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதை "national security threat" என்று விவரித்தார். அவுட்சோர்ஸிங் நிறுவனங்கள் ஹெச்1பி விசா திட்டத்தை அதிகம் சார்ந்து, அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கின்றன என்று கூறினார்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications