அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தினமும் ஏதாவது ஒரு அதிரடி கிளப்புவது போல் இன்றும் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உலகளவில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் கலங்கடித்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை மெல்ல மெல்ல அதிகரித்து வரும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் பாதிப்பாகவே உள்ளது.
டொனால்டு டிரம்ப் இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வெளிநாட்டு வாகனங்கள் மீது கூடுதலாக 25% வரி விதிப்பு ஏப்ரல் 3ஆம் தேதியில் இருந்தும், அமெரிக்க மண்ணில் இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத வரி அடுத்த ஒரு மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அமெரிக்காவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. சொல்லப்போனால் டிரம்ப் தனது வரி விதிப்பை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு முன்னரே துவங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த அறிவிப்பு இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடியாக வாகன ஏற்றுமதி என்பது மிகக் குறைவாக இருந்தாலும், அமெரிக்க ஆட்டோமொபைல் சப்ளை செயினில் இந்திய நிறுவனங்களும் சிறிய பங்கு வகிக்கிறது.
இந்த அறிவிப்பு வெளியான பின்பு டாடா மோட்டார்ஸின் பங்கு மதிப்பு 6% க்கும் அதிகமாகவும், ஐச்சர் மோட்டார்ஸ் சுமார் 2 சதவீதமும், ஹூண்டாய் நிறுவனத்தின் பங்கு சுமார் 1.7 சதவீதமும், சம்வர்தனா மோதர்சன் நிறுவனத்தின் பங்குகள் ஏறக்குறைய 6.4 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதோடு சோனா பிஎல்டபிள்யூ நிறுவனத்தின் மதிப்பு 4.4% க்கும் அதிகமாகவும், பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 4% ஆகவும் குறைந்தது. இதேபோல், நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ் 1.09% குறைந்தது. இந்த சரிவுக்கு இந்திய நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் வைத்திருக்கும் சிறிய அளவிலான வர்த்தகமும் 25 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்படும் என்பது தான்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி வாகன ஏற்றுமதி குறைவாக இருப்பதால், இந்திய வாகனத் துறை இந்த வரிகளால் பெரிதும் பாதிக்கப்படாது என்று மேலோட்டமாக கூறினாலும், உண்மையில் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
உதாரணமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், அந்நிறுவனம் அமெரிக்காவிற்கு நேரடி வாகனங்களை ஏற்றுமதி செய்யவில்லை என்றாலும், அதன் துணை நிறுவனமான பிரிட்டிஷ் ஜாகுவார் லேண்ட் ரோவர்-ன் மொத்த விற்பனையில் அமெரிக்க சந்தையில் மட்டும் 22% கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த வரி விதிப்பு அதன் தயாரிப்புகளின் விலை உயர்த்தி விற்பனையைக் குறைக்க வாய்ப்பு உள்ளது, இது மறைமுகமாக டாடா மோட்டார்ஸ்-ன் நிதிநிலையில் எதிரொலிக்கும்.
இதேபோல், அமெரிக்க மக்கள் மத்தியில் கடந்த 5 வருடத்தில் அதிகப்படியான நம்பிக்கையைப் பெற்று வரும் ராயல் என்பீல்ட்-ன் தாய் நிறுவனமான ஐச்சர் மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தை அமெரிக்கச் சந்தையில் வைத்துள்ளது. அமெரிக்காவில் ராயல் என்ஃபீல்ட் 650 சிசி மோட்டார் சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது 25 சதவீத வரி விதிப்பால் ஏற்படக்கூடிய விலை உயர்வு இந்நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பாதிக்கக்கூடும்.
மேலும், சோனா பிஎல்டபிள்யூ பிரசிஷன் ஃபோர்ஜிங்ஸ் போன்ற நிறுவனங்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து 66% வருவாயைப் பெறுகின்றன. டிரம்ப் விதித்துள்ள வரி விதிப்பால் இந்நிறுவனத்தின் லாப வரம்புகள் பாதிக்கும்.
இதேவேளையில் சோனா பிஎல்டபிள்யூ நிறுவனம் தற்போது சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா சந்தைகளில் விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் இந்த வரி சுமையை சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மாறாக, டெஸ்லா மற்றும் ஃபோர்டு போன்ற பெரிய வாகன உற்பத்தியாளர்களுக்கு முக்கிய சப்ளையராக உள்ள சம்வர்தனா மோதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (SAMIL), கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் துவங்கிய அதன் உற்பத்தி ஆலைகள் மூலம் இந்த வரி பாதிப்புகளை எளிதாக களையும். ஆனாலும் இன்று இந்நிறுவன பங்குகள் சரிந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications