அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை 30 தேதி இந்திய ஏற்றுமதிகளுக்கு 25% வரியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தனது சமுக வலைத்தளத்தில் அறிவித்தார். இந்த வரி ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது. வரி தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து எந்த துறை அதிகம் பாதிக்கப்படப்போகிறது என பலரும் கணித்திருந்தாலும், பலரும் மறந்தது பாதிக்கப்படாத துறை.
ஆம், டிரம்ப அமெரிக்காவுக்கு மிகவும் தேவையான சில பொருட்களுக்கு தற்போது முழு வரி விலக்கு அறிவித்துள்ளார். இந்த வரி விலக்கு மூலம் இந்தியா பெரிய அளவில் பலன் பெற போகிறது என்பது தான் முக்கியமான விஷயம்.

டிரம்ப் அரசு தற்போது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க மண்ணிற்கு வரும் மருந்து மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களான ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதற்கான உற்பத்தி தளம் இல்லாத காரணத்தால் இதற்கு மட்டும் வரி விலக்கு அறிவித்துள்ளார். ஆனால் இந்த பொருட்கள் மீது வரி விதிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதால் தற்போதைக்கு இந்த பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
டிரம்ப் விதித்துள்ள 25 சதவீத வரி இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், 25 பில்லியன் டாலர் மதிப்பிலான பார்மா மற்றும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகள் இதில் பாதிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

பார்மா மற்றும் எலக்ட்ரானிக்ஸ்:
2024-25 நிதியாண்டில், இந்தியா அமெரிக்காவுக்கு சுமாக் 10.5 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்து மற்றும் மருந்து பொருட்கள் மற்றும் 14.6 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்துள்ளது, இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 29% பங்கைக் கொண்டுள்ளது.
ஜனவரி 2025 முதல் ஜூன் 2025 வரை, ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் வரி விதிக்கப்படாத காரணத்தால் இந்திய ஏற்றுமதியில் 17-18% பங்கு வகித்த வேளையில் 20%க்கு மேல் உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் மருந்துகள் ஏப்ரல் முதல் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்ட 10% அடிப்படை கடன் வரியிலிருந்தும் கூட விலக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலியம் ஏற்றுமதி:
இதேபோல் இந்தியாவின் 4.09 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பெட்ரோலியம் ஏற்றுமதிகளும் தற்போது டிரம்பின் புதிய வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளன. டிரம்ப் அரசு எனர்ஜி பொருட்களுக்கு வரி விலக்கப்பட்ட பட்டியலில் உள்ளதால் இதற்கும் வரி இல்லை.
இந்தியாவுக்கு வாய்ப்பு:
டிரம்ப் அரசு இந்த 3 பிரிவு பொருட்கள் மீது வரி விதிக்கும் வரையில் இந்திய நிறுவனங்கள் அதிகப்படியான பொருட்களை தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் இந்தியாவுக்கு இதில் ஜாக்பாட் தான்.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications