ஈரானில் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேலாக மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
ஏற்கனவே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நீடிக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரான் மக்களுக்கு விடுதலை பெற்று தர அமெரிக்கா தயாராக இருக்கிறது என கூறியுள்ளார். போராட்டக்காரர்களை ஒடுக்கினால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே ஈரான் அரசு போராட்டக்காரர்களை கடவுளின் எதிரிகள் என அறிவித்துள்ளது. அமெரிக்கா தான் இப்படி தூண்டிவிட்டு போராட்டங்களை நடக்க செய்வதாக சாடியுள்ளது. இது ஒருபுறம் இருக்க அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க தூதரகமும் ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் ஈரானுடன் வணிக கொண்ட நாடுகளுக்கு அமெரிக்கா 25% வரி விதிக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார். தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர் ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவித்திருக்கிறார். ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் தான் அதிகமாக ஈரானுடன் வணிகம் செய்கிறது. எனவே டிரம்பின் இந்த வரி விதிப்பு இந்த நாடுகளை தான் கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே இந்திய பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 25 % வரியும் சேர்ந்தால் 75 % வரியாக உயரும்.இருந்தாலும் டிரம்பின் இந்த 25% வரி விதிப்பு எந்த வகையான சரக்குகள் அல்லது சேவைகளுக்கு பொருந்தும் என்ற விளக்கத்தை அமெரிக்க அரசு வெளியிடவில்லை.
ஈரானுடன் வணிகம் புரியக்கூடிய ஐந்து பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசி, தேயிலை, சர்க்கரை, பழங்கள், மருந்து பொருட்கள், சர்பத் ,கறி, பருப்பு வகைகள் உள்ளிட்டவை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே வேளையில் ஈரானிடம் இருந்து இந்தியா மெத்தனால், பெட்ரோலியம் பொருட்கள், ஆப்பிள், புரோபேன், காய்ந்த பேரிச்சம்பழம், ரசாயனங்கள், பாதாம் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்கிறது.
2022-23 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான மொத்த வர்த்தக மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள் இது 2023 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக சரியா தொடங்கி விட்டது. இது தவிர சபாஹாரில் இருக்கும் துறைமுகத்தை மேம்படுத்தி பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் இருக்கிறது. அமெரிக்க அரசு இந்த ஒப்பந்தத்தை தொடர அனுமதி அளித்திருந்தாலும் இந்த கூடுதல் வரி என்ற அறிவிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!



Click it and Unblock the Notifications