அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டபடி, அந்நாட்டிற்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகப்படியான வரி விகிதங்களை விதித்துள்ளார். இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசலை ஏற்படுத்தி மோசமான நிலைமைக்குத் தள்ளியுள்ளது.
டிரம்ப் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் வரியில் கிட்டத்தட்டப் பாதி அளவை மட்டுமே விதிக்கப்படுவதாக அறிவித்து இந்த ரெசிப்ரோக்கல் வரியை விதித்துள்ளார். இதன் அடிப்படையில் தான் இந்தியப் பொருட்களுக்கு 26% வரி விதிக்கும் இந்த முடிவை நேற்று வெளியிட்டார்.

உதாரணமாக இந்தியா அமெரிக்கப் பொருட்கள் மீது 52 சதவீதம் அளவிலான வரி விதிப்புகளை விதிப்பதாகவும், ஆனால் அமெரிக்கா இந்தியா மீது 26 சதவீத வரி மட்டுமே விதிப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த 52 சதவீத வரியை எப்படிக் கணக்கிடப்பட்டது என்பதை டிரம்ப் விளக்கம் அளிக்கவில்லை.
அமெரிக்கா அரசு இந்தியா மட்டும் அல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தைவான், வியட்நாம் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பிற முக்கிய அமெரிக்க வர்த்தக கூட்டணி நாடுகளுக்கு வரிகளை விதித்துள்ளது. குறிப்பாக, சீனா மிகவும் கடுமையான வரி விதிப்பை எதிர்கொள்கிறது, சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 67 சதவீதம் வரியை விதிப்பதாகவும், இதில் பாதி 34 சதவீதம் வரியை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
இந்த நிலையில் டிரம்ப் இந்தியா மீதான வரியை விதிக்கும் போதும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனக்கு இருக்கும் தனிப்பட்ட நட்புறவு இந்த வரி விதிப்பு முடிவில் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்று டிரம்ப் கூறினார். இந்நிலையில் இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்கவும், அல்லது பதிலடி வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளது.
இந்தியாவின் முயற்சிகள்: அமெரிக்க அரசு விதித்துள்ள இந்த வரிகள் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்கப் பின்னடைவாக உள்ளது, இதனால் புதிய வரிகளைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டிரம்ப் விதித்துள்ள வரியை திரும்ப பெறும் வகையில், இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரி தளர்வுகளைக் கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்து வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடியின் வாஷிங்டன் பயணத்தின் போது, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டன. ஆனால், இந்த வரிகளின் அமலாக்கம், அமெரிக்காவின் அணுகுமுறையில் முக்கியமான மாற்றம் நடந்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால் இந்தியாவுக்குச் சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவது என்பது கிட்டத்தட்ட முடியாத நிலைக்கு வந்துள்ளது.
ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கு முன்பு அமெரிக்கா இந்திய பொருட்களுக்குச் சராசரியாக 3.3 சதவீத வரியை மட்டுமே விதிக்கிறது, ஆனால் இந்தியா 17 சதவீதம் வரியை விதிக்கிறது என வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக விதிக்கப்பட்ட வரிகள் இந்திய அரசு அமெரிக்கப் பொருட்கள் மீதானவரி விதிப்பு முறையில் கூடுதலான சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே இந்தியா அமெரிக்க அரசுடனான பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.
இந்திய அரசு தரப்பில் ஏற்கனவே அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு வரி குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், இதனுடன் பிற பொருட்கள் மீதான வரியைக் குறைக்க இருதரப்பு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியாவுக்குச் சாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று இந்திய அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.
டிரம்ப்-ன் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க கடந்த சில வாரத்தில் இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 8500 தொழிற்துறை பொருட்கள், அமெரிக்க போர்பன் விஸ்கி, ஹார்லி டேவின்சன் பைக் ஆகியவற்றின் மீது வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் அமெரிக்காவுக்கு நிதி ஆதாரம் கொடுக்க இந்தியா அமெரிக்கக் கச்சா எண்ணெய், எரிவாயு, பாதுகாப்புத் துறை கருவிகள், ஆயுதங்களை அதிகமாக வாங்கும் முடிவுக்கு வந்தது. ஆனாலும் டிரம்ப் 26 சதவீத ரெசிப்ரோக்கல் வரியை விதித்துள்ளார்.
அமெரிக்கா நேற்று அறிவித்துள்ள வரி விதிப்பில் அதிகப்படியான வரி சுமையை எதிர்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனா, ஐரோப்பா, வியட்நாம், தைவான், ஜப்பான் ஆகியவை முதல் 5 இடத்தில் உள்ளது.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications