கிரிப்டோகரன்சி சந்தை திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெரும் உயர்வுடன் துவங்கியுள்ளது, கடந்த வாரம் முழுவதும் மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்த முன்னணி கிரிப்டோகரன்சி அனைத்தும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பிட்காயின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமானது, இதேபோல் மற்ற முன்னணி கிரிப்டோகரன்சியும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய அமெரிக்க மூலோபாய நாணய கையிருப்பில் கிரிப்டோகரன்சியும் சேர்க்கப்படும் என்று கூறிய காரணத்தால் சரிவில் இருந்து பல கிரிப்டோகரன்சிகளும் இன்று தடாலடியாக உயர துவங்கின. இந்த அறிவிப்பு, கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், டிஜிட்டல் சொத்துக்கள் குறித்த தனது ஜனவரி நிர்வாக உத்தரவை தொடர்ந்து அமெரிக்கா பிட்காயின், எத்தர், எக்ஸ்ஆர்பி, சோலானா மற்றும் கார்டானோ உள்ளிட்ட நாணயங்களின் கையிருப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்தார். இந்த நாணயங்களின் பெயர்கள் இதற்கு முன்பு வெளியிடப்படவில்லை, ஜனவரி மாத உத்தரவில் டிஜிட்டல் கரன்சிகளை மட்டுமே கையிருப்பில் சேர்ப்பதாக அறிவிக்கப்பட்டது.
டொனால்டு டிரம்ப்-ன் இந்த அறிவிப்பு, கிரிப்டோ சந்தையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, பிட்காயின் மற்றும் எத்தர் இந்த கையிருப்பில் பெரும் பகுதியை வகிக்கும் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டது, கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியது.
இந்த பதிவின் எதிரொலி உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினை 20% க்கும் அதிகமாக உயர்த்தியது, இதன் மூலம் நேற்று வரையில் சரிவில் தத்தளித்த பிட்காயின் 24 மணிநேரத்தில் 78,273 டாலரில் இருந்து 94,154 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதேபோல் எதர் 20 சதவீதம் உயர்ந்து $2,482 ஆக இருந்தது, எக்ஸ்ஆர்பி 38% ஆகவும், சோலானா 20% ஆகவும், கார்டானோ 78% ஆகவும் உயர்ந்தது. இந்த திடீர் உயர்வு, கிரிப்டோ சந்தையில் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்கியுள்ளது.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க அரசு நடத்தும் முதல் வெள்ளை மாளிகை கிரிப்டோ உச்சி மாநாடு வரையில் இந்த தடாலடி உயர்வு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த உச்சி மாநாடு, கிரிப்டோ சந்தையில் மேலும் பல மாற்றங்களை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வால் ஸ்ட்ரீட் வெள்ளிக்கிழமை உயர்ந்த நிலையில் முடிந்தாலும், என்விடியா போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வீழ்ச்சி முதலீட்டாளர்களை பிட்காயின் பக்கம் திருப்பியுள்ளது. பிப்ரவரியில் பிட்காயின் 17% க்கும் அதிகமாக சரிந்ததை மறக்க கூடாது. ஜூன் 2022 க்குப் பிறகு பிட்காயின் அதன் மிகப்பெரிய மாதாந்திர வீழ்ச்சியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
கிரிப்டோ ஆதாரவாளரான டொனால்டு டிரம்ப் ஆட்சியை பிடித்த போது ஜனவரி மாத தொடக்கத்தில் பிட்காயின் 105,000 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. ஆனால் அதன் பின்பு, இந்த உச்ச விலையில் இருந்து மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications