அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் மீண்டும் பெரிய மாற்றத்தை டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்ப் அறிவித்த சுங்கவரியும் அதை அமலாக்கம் செய்த முறையும் முற்றிலும் சட்டவிரோதம் என தீர்ப்பளித்ததற்குப் பின்னர், புதிய சட்டப் பிரிவுகளின் கீழ் சுங்கவரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் படி டிரம்ப் உலக நாடுகளுக்கு 10% அடிப்படை சுங்கவரியை முதல்கட்டமாக விதித்திருந்த நிலையில், அதை 15% ஆக உயர்த்தி உடனடி அமலுக்கு கொண்டு வருவதாக சனிக்கிழமை அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, உலகளாவிய வர்த்தகத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதுக்குறித்து டிரம்ப் தனது சமுக வலைத்தள பதிவில் "பல ஆண்டுகளாக அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பயன்படுத்திக் கொண்ட நாடுகளுக்கு பதிலடி" என குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் போது தன்னிடம் பேக்அப் பிளான் இருப்பதாக அறிவித்த நிலையில், தற்போது 15 சதவீத வரியை புதிய சட்ட பிரிவின் கீழ் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் மூலம், ஏற்கனவே அமலில் இருந்த சுங்கவரிகளுக்கு மேலாக 10% உலகளாவிய வரி விதிக்கப்படுமெனவும், அதோடு தேசிய பாதுகாப்பு மற்றும் பிற வர்த்தகச் சட்டங்களின் கீழ் விதிக்கப்பட்ட அனைத்து சுங்கவரிகளும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
Section 122 சட்டம்
1974ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் கீழ் உள்ள Section 122, அதிபருக்கு "Balance of Payments Emergency" என்ற பெயரில் தற்காலிக இறக்குமதி கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இந்த பிரிவின் கீழ் அதிகபட்சம் 15% வரை சுங்கவரி விதிக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கை 150 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர் நீட்டிக்க வேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.
இதன் மூலம், உடனடி பொருளாதார அழுத்தத்தை சமாளிக்க தற்காலிக தீர்வாக சுங்கவரி விதிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இது நிரந்தர தீர்வாக அமையாது.
Section 232 சட்டம்
1962ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் Section 232, தேசிய பாதுகாப்பு காரணத்தைக் காட்டி சுங்கவரி அல்லது இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதிக்கிறது. இந்த பிரிவில் 15% என்ற வரம்போ, 150 நாள் காலவரம்போ இல்லை.
ஆனால் இதற்கு முன் விசாரணை நடத்தப்பட வேண்டும். 270 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். பின்னர் அதிபர் 90 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும். முடிவு எடுத்தால், 15 நாட்களுக்குள் அது அமல்படுத்தப்படலாம். இங்கு காங்கிரஸ் ஒப்புதல் அவசியமில்லை; அதிபர் எழுத்து விளக்கம் அளிப்பது போதுமானது.

உலக சந்தைகளுக்கு என்ன பாதிப்பு?
இந்த அறிவிப்பு உலகளாவிய வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 15% உலகளாவிய சுங்கவரி அமல்பட்டால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருட்கள் அதிக விலையாகும். இது இந்தியா உள்ளிட்ட பல வளர்ந்து வரும் நாடுகளின் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சவாலாக அமையலாம்.
மொத்தத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பதிலடி என்ற வகையில் டிரம்ப் எடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கை, அமெரிக்கா-உலக வர்த்தக உறவுகளில் புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளது. வருங்காலத்தில் காங்கிரஸ் மற்றும் நீதிமன்றத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது உலக முதலீட்டாளர்களின் கவனத்தில் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications