வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து தங்கி நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஏற்ற வகையில் கோல்டு கார்டு என்ற விசா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார் டிரம்ப். டிரம்ப் தலைமையிலான அரசு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதற்கும் அமெரிக்காவில் வந்து நிரந்தரமாக குடியேறுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த வண்ணம் இருக்கிறது.
விசா விண்ணப்பம் செய்பவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்வது, கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் எந்தெந்த நிறுவனங்களில் வேலை செய்தார்கள் என்பனவற்றை தீவிரமாக கண்காணிப்பது என விசா நடைமுறையிலேயே பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இதனால் வெளிநாட்டவர்கள் அமெரிக்கா செல்வது வேலை பெறுவது நிரந்தரமாக குடியுரிமை பெறுவதும் சிக்கலாகி இருக்கிறது.

இந்த சூழலில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வந்து நிரந்தர குடியுரிமை பெற வேண்டுமென்றால் தன்னுடைய அரசாங்கம் அதற்காகவே பிரத்தியேகமாக கோல்டு கார்டு என்ற விசா திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக கூறியிருந்தார். கடந்த வாரம் டிரம்பின் கோல்டு கார்டு விசா திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளிநாட்டவர்கள் கோல்டு கார்டு விசா வேண்டி விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்கா அரசாங்கத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணம் உங்களுக்கு திரும்ப கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் ஆகும். அந்த வகையில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வேண்டும் என்பவர்கள் 9 கோடி ரூபாய் செலுத்தி விட்டு கோல்டு கார்டு விசாவை பெறலாம்.
கோல்டு கார்டு விசாவை நிறுவனங்களும் பயன்படுத்தி திறன் மிகு ஊழியர்களை பணியில் அமர்த்தலாம் என கூறியுள்ளது. ஆனால் வெளிநாட்டவர்கள் மத்தியில் இந்த விசாவிற்கு வரவேற்பே இல்லை என தெரிவிக்கிறார் சிங்கானியா நிறுவனத்தின் தலைவர் கேசவ் சிங்கானியா.
கோல்டு கார்டு விசா எப்படி செயல்படுகிறது என்பது குறித்த தெளிவான வழிமுறைகளை டிரம்ப் நிர்வாகம் வெளியிடவில்லை, மேலும் இது எப்படி ஒருவருக்கு நிரந்தர குடியுரிமையை தரப்போகிறது என்பதற்கான விளக்கமும் அதில் இடம்பெறவில்லை. இதனால் வெளிநாட்டவர்கள் பெருமளவில் குழப்பம் அடைந்திருக்கின்றனர் என்கிறார்.
இமிகிரேஷன் பிரிவில் வேலை செய்யக்கூடிய பூர்வி தோத்தானி இதுவரை ஒருவர் கூட இந்த கோல்டு கார்டு விசா தொடர்பாக எங்களிடம் விசாரணை நடத்தவில்லை எனக் கூறியிருக்கார். அப்படியே யாரேனும் வந்தால் கூட கோல்டு கார்டுக்கு பதிலாக EB - 5 விசாவிற்கு செல்லுமாறு நாங்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறோம் என தெரிவிக்கிறார்.
ஆனால் ஈபி5 முதலீட்டாளர் விசா திட்டம் பலரிடமும் வரவேற்பை பெற்று இருக்கிறதாம் . குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த பலரும் ஈபி-5 விசா வேண்டி விண்ணப்பம் செய்கிறார்கள் . அமெரிக்கா ஒரு ஆண்டுக்கு 10000 ஈபி 5 விசாக்களை வழங்குகிறது. ஒரு நாட்டுக்கு 700 விசாக்கள் மட்டுமே என அளவு நிர்ணயம் செய்திருக்கிறது .
இந்த விசாவில் அமெரிக்காவுக்கு வருபவர்கள் 8 லட்சம் டாலர்களை முதலீடு செய்திருக்க வேண்டும் , இதன் மூலம் அமெரிக்காவில் குறைந்தது பத்து வேலை வாய்ப்புகள் ஆவது உருவாகி இருக்க வேண்டும. அந்த நபர் குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு வந்து தங்கலாம். ஆனால் கோல்டு கார்டு திட்டத்திற்கு இன்னும் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தந்து சட்டமாக்கவில்லை என்பதால் பலரும் அதனை எடுக்க தயங்குகின்றனர் என கூறுகின்றனர். கோல்டு கார்டு விசாவில் உடன் யாரும் வர முடியாது என்பதும் தயக்கத்தை தருகிறது என இமிகிரேசன் ஏஜென்சிகளை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!



Click it and Unblock the Notifications