அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H1-B விசா திட்டத்தை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது முந்தைய நிலைப்பாட்டிற்கு அந்தர் பல்டி அடித்துள்ளார். இது இந்திய டெக் ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது, ஆனால் இதே வேளையில் ஹெச்1பி விசா மீது விதிக்கப்பட்டு உள்ள 1 லட்சம் டாலர் கட்டணம் குறைக்கப்படுமா அல்லது நீக்கப்படுமான என்பது தெரியவில்லை.
செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பான டிரம்ப் உடனான ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில், பத்திரிக்கையானரா லாரா இங்க்ராம், H1-B விசாக்கள் அமெரிக்க தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைக்கலாம் என்ற குற்றச்சாட்டை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், இதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் திறமையான ஊழியர்களை வெளியே இருந்து கொண்டுவர வேண்டியது அவசியமானதாக உள்ளது" என்று கூறினார்.

அமெரிக்காவில் போதுமான திறமை உள்ளவர்கள் இல்லையா என்று லாரா கேட்டார், இதற்கு டிரம்ப் "உண்மையில் அமெரிக்காவில் போதுமான திறமையானவர்கள் இல்லை... சில திறமைகள் இங்கு இல்லை. மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வேலையில்லாதவர்களை எடுத்து நேரடியாக 'ஏவுகனைகளை தயாரிக்கும் குழுவில் வைத்துவிட முடியாது என்று டிரம்ப் உதாரணம் தந்தார்.
டிரம்ப்-ன் இந்த பேச்சு, அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப மற்றும் தொழிற்சாலைகளில் வெளிநாட்டு நிபுணர்களின் தேவையை டிரம்ப் நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளதை காட்டுகிறது. இதனால் ஹெச்1பி விசா திட்டத்தை டிரம்ப் அரசு கையாளும் முறை மாறுமா என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்துள்ளது. இதேபோல் 1 லட்சம் டாலர் கட்டணம் நீக்கப்படுமான என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டிரம்பின் இந்த பேட்டியில் செப்டம்பர் மாதத்தில் ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற சோதனை குறித்தும் பேசினார். ஜார்ஜியாவில் இருக்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மற்றும் எல்ஜி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனங்களின் பேட்டரி தொழிற்சாலையில், 300க்கும் மேற்பட்ட தென் கொரிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த சம்பவம், அமெரிக்காவின் எலக்ட்ரிக் வாகன துறையில் திறமை தட்டுப்பாடு இருப்பதையும், வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவையை காட்டுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட 300-400 ஊழியர்கள் பல ஆண்டுகளாக பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் பேட்டரி தயாரிப்பு என்பது எளிதானது இல்லை, கெமிக்கல் தாக்கம், விபத்து ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும் வேளையில் இத்தகைய துறையில் பணியாற்ற அனுபவம்மிக்க ஊழியர்கள் கட்டாயம் தேவை. இத்தகைய இடத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் மக்களை நேரடியாக பணியில் அமர்த்திவிட முடியாது என டிரம்ப் பேசினார்.
முன்பு டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்தும் நோக்கில், செப்டம்பரில் H1-B விசாவுக்கு 1 லட்சம் டாலர் (சுமார் 84 லட்சம் ரூபாய்) விண்ணப்பக் கட்டணம் விதிப்பதாக உத்தரவைப் பிறப்பித்தது. இது, அமெரிக்காவுக்கு வெளியே இருந்து வரும் திறமையான வெளிநாட்டினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
H1-B விசா, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாக இருக்கும், அதை மீண்டும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கலாம். இந்த திட்டம், அமெரிக்க நிறுவனங்களை தொடர்ந்து உலக நாடுகளில் போட்டிப்போட உதவுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications