அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் H1-B விசா திட்டத்தை ஆதரிக்கும் வகையில் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் பேட்டியில் பேசியது, இன்று இந்திய ஐடி நிறுவன பங்குகளின் உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இன்று காலை முதல் பிஎஸ்ஈ, என்எஸ்ஈ குறியீடுகள் உயர்வுடன் காணப்படும் நிலையில், ஐடி பங்குகளின் திடீர் உயர்வு கவனிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் நவம்பர் 11ஆம் தேதி டொனால்டு டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த நேர்காணலில், டிரம்ப் அமெரிக்காவில் தேவையான திறமையான தொழிலாளர்கள் இல்லை என்று பேசினார். இதோடு அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஹெச்1பி விசா திட்டம் அவசியம் என்றும் பேசினார் டிரம்ப்.

இதன் மூலம் இன்று பங்குச் சந்தை வர்த்தகத்தில் நிஃப்டி ஐடி குறியீடு 3 சதவீதம் உயர்ந்து 36,909.75 என்ற உச்சத்தை எட்டியுள்ளது. டெக் மஹிந்திரா போன்ற பெரிய நிறுவனங்களால் இந்த உயர்வு சாத்தியமானாலும், சிறிய நிறுவனங்கள் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
H1-B விசா, இந்திய ஐடி தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை ஈர்க்கும் முக்கிய கருவியாக இருக்கும் வேளையில், டிரம்ப்-ன் இந்த பேச்சு இத்துறைக்கு சாதமாகமாக மாறியுள்ளது. அதேபோல் ஹெச்1பி விசா கட்டுப்பாட்டில் மாற்றம் வரவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
டிரம்பின் பேட்டிக்கு பின்பு, நவம்பர் 12ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச் சந்தையில் ஐடி பங்குகள் பெரும் உயர்வை கண்டன. நிஃப்டி ஐடி இன்டெக்ஸ் 3 சதவீதம் உயர்ந்தது, இதில் டெக் மஹிந்திரா 3 சதவீதம் வளர்ச்சியுடன் முன்னிலை வகித்தது. எல்டிஐ மைண்டுட்ரீ, டாடா எலெக்சி, எம்ஃபேசிஸ், டிசிஎஸ் பெர்சிஸ்டென்ட், ஒராக்கிள் பினான்ஷியல் சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தன.
இதைதொடர்ந்து இன்போசிஸ், விப்ரோ, கோபோர்ஜ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் 1 -2 சதவீதம் வரையில் உயர்ந்து காணப்பட்டது. ஐடி பிரிவில் யூனிஈகாமர்ஸ் நிறுவனம் 7.15 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது H1-B விசா தொடர்ந்து இந்திய ஐடி சேவை துறைக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையை டிரம்ப்-ன் பேட்டி கொடுத்தது தான். டிரம்பின் முதல் ஆட்சி காலத்தை போலவே இரண்டாவது பதவிக்காலத்திலும் குடியேற்ற விதிகளில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நேற்றைய பேட்டியில் டிரம்ப் தனது மனநிலையை மாற்றியிருப்பது தெரிகிறது.
சமீபத்தில் டிரம்ப் 2026 முதல் H1-B விசாவுக்கு 1 லட்சம் டாலர் (சுமார் 84 லட்சம் ரூபாய்) விண்ணப்பக் கட்டணம் விதிக்கப்பட்டது, இது அமெரிக்காவின் பெரிய டெக் நிறுவனங்கள் முதல் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் வரையில் கடுமையாக பாதித்தது.
இந்த முடிவு, அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த முடிவு சரியில்லை என்பதை கிட்டத்தட்ட டிரம்ப்-ன் பேட்டி உணர்த்துகிறது.
டிரம்ப்-ன் 1 லட்சம் டாலர் கட்டணத்திற்கு பின்பு இந்திய ஐடி நிறுவனங்கள், H1-B விசாவை அதிகளவில் நம்பியிருப்பதை கணிசமாக குறைத்துள்ளன. டிரம்பின் கட்டணத்தில் இருந்து தப்பிக்க அதிகளவில் உள்ளூர் ஊழியர்களை பணியில் அமர்த்தும் முடிவுக்கு இந்திய ஐடி நிறுவனங்கள் வந்துள்ளன. இதேவேளை.ில் அமெரிக்காவில் இழக்கும் வர்த்தகத்தை ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளை விரிவாக்கும் செய்வது மூலம் ஈடு செய்ய முயற்சி செய்து வருகின்றன. இதோடு இனி வரும் காலக்கட்டத்தில் ஹெச்1பி விசாவுக்கு பதிலாக எல்1 விசா பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?



Click it and Unblock the Notifications