ஐடி ஊழியர்களை அலறவிடும் டிரம்ப்.. H1B விசா லாட்டரி ரத்து.. உங்க சம்பளம் தான் இனி முடிவு செய்யும்..!!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றிய நாளில் இருந்து தினமும் ஒரு அதிரடி என்ற வகையில் ஏதாவது ஒரு அறிவிப்புகள் வந்துக்கொண்டு இருக்கிறது. ரெசிப்ரோக்கல் வரி குறித்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முடிவுக்கு வரும் வேளையில், டிரம்ப் அரசு அடுத்த அதிரடிக்கு தயாராகியுள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை (DHS), H1B விசா திட்டத்தில் பெரிய மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. தற்போதைய ஹெச்1பி விசா லாட்டரி முறையை நீக்கி, அதிக சம்பளம் பெறும் அல்லது அதிகப்படியான கல்வி தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய "weighted selection" முறையை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சி நடைபெறுகிறது.

ஐடி ஊழியர்களை அலறவிடும் டிரம்ப்.. H1B விசா லாட்டரி ரத்து.. உங்க சம்பளம் தான் இனி முடிவு செய்யும்..!!

டொனால்ட் டிரம்ப் தீவிரம்: இந்த புதிய பரிந்துரை, டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தின் நீட்சியாக பார்க்கப்படுகிறது. முதல் ஆட்சி காலத்தின் இறுதியில் லாட்டரி முறையை நீக்கிவிட்டு தகுதி அடிப்படையில் விசா வழங்க வேண்டும் என முன்மொழிந்தார் டிரம்ப், கிட்டத்தட்ட இதை திட்டத்தை டிரம்ப் இரண்டாம் பதவிக்காலத்திலும் எதிரொலித்துள்ளது.

முதல் ஆட்சி காலத்தில் டிரம்ப் அரசுக்கு நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் இல்லை, ஆனால் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்ப் அரசு ஆதிக்கம் செலுத்தி வருவதால் இந்த பரிந்துரை நடைமுறை செய்யப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இது உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.

ஹெச்1பி விசா: தற்போது, அமெரிக்க அரசு H1B விசா திட்டம் கீழ் ஆண்டுக்கு 85,000 விசாக்களைக் அளிக்கிறது. இதில் 65000 விசா பொது பிரிவில் விண்ணப்பம் செய்பவர்களுக்கும், 20,000 விசாக்களை அமெரிக்க கல்லூரியில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய மாற்றம்: ஆனால், புதிய முன்மொழியப்பட்ட முறையில் ஹெச்1பி விசாக்கள் வழங்கப்படும் விண்ணப்பத்தாரரை தேர்வு செய்யும் லாட்டரி முறையை அகற்றி, விண்ணப்பங்களை, சம்பளம் அல்லது கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யும் படி பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதை தான் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை (DHS) "weighted selection" முறை என அழைக்கிறது.

ஐடி ஊழியர்களை அலறவிடும் டிரம்ப்.. H1B விசா லாட்டரி ரத்து.. உங்க சம்பளம் தான் இனி முடிவு செய்யும்..!!

காசு, பணம், துட்டு: இந்த முறையின் கீழ் அதிக சம்பளம் பெறும் நிபுணர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்பது தான் தற்போதை முக்கியமான பிரச்சனையாக உள்ளது. ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், H1B விசா பெறுவோரின் சராசரி சம்பளம் $106,000 முதல் $172,000 ஆக உயரலாம், இதேபோல் இந்த சட்டம் 2027க்குள் நடைமுறைக்கு வர 30% வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிக பாதிப்பு: இந்த மாற்றம் மூலம் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அமெரிக்க கல்லூரியில் புதிய பட்டதாரிகளையும், இந்திய விசா விண்ணப்பதாரர்கள் தான். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை பரிந்துரைத்துள்ள பரிந்துரையில் விசா விண்ணப்பம் 4 பிரிவில் பிரிக்கப்படுகிறது. இதில் Level I - "entry", Level II - "qualified", Level III - "experienced", Level IV - "fully competent" ஆகியவை இதில் அடங்கும்.

ஆய்வு: 2026 ஆம் நிதியாண்டுக்கான 4,80,000 ஹெச்1பி விசா விண்ணப்பதார்களின் சம்பளம் மற்றும் கல்வி அடிப்படையில் கணக்கிட்டால் 13 சதவீதம் விண்ணப்பங்கள் லெவல் 4 பிரிவிலும், 24 சதவீதம் விண்ணப்பங்கள் லெவல் 3 பிரிவிலும் விசா கிடைக்கும்.

ஆனால் தற்போது 90% விசாக்கள் புதிய பட்டதாரிகள் லெவல் 1 ("entry") மற்றும் லெவல் 2 ("qualified") பிரிவினர் (குறைவான சம்பளம் பெறுவோர்) பெற்று வருகின்றனர்.

இந்த 4,80,000 விண்ணப்பதார்களின் சம்பளத்தை ஆய்வு செய்யும் போது முதல் 2 பிரிவுகளில் இருக்கும் விண்ணப்பதாரரின் சம்பளம் என பார்த்தால் 83000 டாலர் முதல் 108000 டாலர் வரையில் மட்டுமே உள்ளது. லெவல் 3 பிரிவில் இருப்பவர்களுக்கு 1,27,000 டாலருக்கும் அதிகமாகவும், லெவல் 4 பிரிவில் இருப்பவர்களுக்கு 1,51,000 டாலருக்கும் அதிகமாகவும் சம்பளம் பெற்று வருகின்றனர்.

அதிக வாய்ப்பு: இதோடு முக்கியமாக உள்நாட்டு பாதுகாப்பு துறை (DHS) சமர்ப்த்துள்ள பரிந்துறையை நடைமுறைக்கு வந்தால் அதிகம் சம்பளம் வாங்குவோர் மட்டுமே இனி சான் ஃபிரான்சிஸ்கோ, நியூ யார்க் மற்றும் சான் ஜோஸ் போன்ற நகரங்களில் பணியாற்ற முடியும். இதனால், பே ஏரியா மென்பொருள் பொறியாளர்கள் பெரும் சவாலை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

ஐடி ஊழியர்களை அலறவிடும் டிரம்ப்.. H1B விசா லாட்டரி ரத்து.. உங்க சம்பளம் தான் இனி முடிவு செய்யும்..!!

பட்டதாரிகளுக்கு பிரச்சனை: இப்புதிய மாற்றம், அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்றும் பட்டதாரிகள் பெரு நகர வேலைவாய்ப்புகளை விடுத்து, இரண்டாம் நிலை நகரங்களை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. பொதுவாக சான் ஃபிரான்சிஸ்கோ, நியூ யார்க் மற்றும் சான் ஜோஸ் போன்ற நகரங்களில் பணியாற்றுபவர்களுக்கு தான் அதிக சம்பளம் கிடைக்கும்.

இந்திய ஐடி ஊழியர்கள்: ஹெச்1பி விசாவில் அதிகம் பயன்பெறும் இந்தியர்களை பார்த்தால் மூத்த நிலை ஊழியர்கள் தான், காரணம் நிர்வாகம், டீம் மேனேஜர் பதவிகளில் இருப்பவர்களுக்கு தான் அதிக சம்பளம் கிடைக்கும். இதனால் இப்பிரிவில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும்.

இதை எளிதாக சொல்ல வேண்டும் என்றால் 1,40,000 டாலருக்கு அதிகமாக சம்பளம் வாங்குவர் மட்டுமே சான் ஃபிரான்சிஸ்கோ, நியூ யார்க் மற்றும் சான் ஜோஸ் போன்ற நகரங்களில் பணியாற்ற முடியும். இதேபோல் இத்தகைய சம்பளம் பொதுவாக மூத்த அதிகாரிகளுக்கும், அதீத கல்வி பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

மொத்தத்தில், H1B விசா முறையில் இந்த மாற்றம், தொழில்நுட்ப துறையில் புதிய சவால்களை உருவாக்குகிறது. உயர் சம்பளம் மற்றும் தகுதி கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் இந்த பரிந்துரை ஒப்புதல் பெற பலகட்டங்கள் உள்ளது, முதலில் டிரம்ப் நிர்வாகத்தின் ஒப்புதல், அதன் பின்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் ஆகியவை உள்ளது. மேலும் இத்திட்டத்தை நீதிமன்றத்தின் வாயிலாகவும் எதிர்க்க முடியும், டிரம்ப்-ன் கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட உத்தரவை நீதிமன்றத்தின் வாயிலாக தான் ரத்து செய்யப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+