2026 ஆம் ஆண்டு அதிரடி ராணுவ நடவடிக்கைகளுக்கான ஆண்டாக மாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தாலும் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை வரை அவை சென்றது கிடையாது. ஆனால் இந்த ஆண்டு அவை ஒவ்வொன்றாக நடக்கிறது.
நீண்ட காலமாக அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் பகை இருந்தது. கம்யூனிச நாடான வெனிசுலா மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்திருந்தது. இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் திடீரென அமெரிக்க ராணுவம் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது.

இதனை அடுத்து வெனிசுலாவின் எண்ணெய் வளம் அமெரிக்காவுக்கு சொந்தமானது என அறிவித்த டிரம்ப் அந்நாட்டு கச்சா எண்ணெயை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாங்குவதை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்தார். ஜனவரி மாதம் வெனிசுலா மீது கைவைத்த டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது கை வைத்திருக்கிறார்.
ஒருபுறம் ஈரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தி வந்த அமெரிக்கா மற்றொருபுறம் தன்னுடைய போர்க்கப்பல்களை தொடர்ச்சியாக ஈரான் மற்றும் சுற்றி இருந்த பகுதிகளை நோக்கி நிலை நிறுத்தியது. இந்த சூழலில் தான் சனிக்கிழமை அன்று திடீரென அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனியை கொலை செய்துள்ளன.
ஜனவரியில் வெனிசுலா, பிப்ரவரியில் ஈரான் அப்படி என்றால் மார்ச் மாதத்தில் எந்த நாடு எந்த தலைவர் என சமூக வலைத்தளங்களில் தற்போது விவாதம் அனல் பறக்க தொடங்கியிருக்கிறது. கியூபா , ஈராக் போன்ற நாடுகள் மீது இதே பாணியிலான தாக்குதலை அமெரிக்கா நடத்துவதற்கு வாய்ப்புள்ளதோ என சமூக வலைத்தளவாசிகள் விவாதிக்க தொடங்கிவிட்டனர். தங்கள் நாட்டு மத தலைவரை அமெரிக்க அரசாங்கம் கொன்றதை ஈரான் அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவிக்கிறது.
மற்றொருபுறம் இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் தொடரும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன. ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவும் சீனாவும் கடுமையாக கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. இந்த நிலையில் தான் இது மூன்றாம் உலக போருக்கு விதையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக தீர்க்கதரிசியான பாபா வாங்கா 2026இல் பெரிய போர் நடக்கும் என கூறியிருந்த கணிபுகள் உண்மையாகிறதோ என சமூக வலைத்தளவாசிகள் பேச தொடங்கி இருக்கின்றனர். பாபா வாங்கா பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற நபர். சிறு வயதில் பார்வை பறி போன போது தான் இவருக்கு எத்ரிகாலத்தை கணிக்கும் சக்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 2026 மூன்றாம் உலக போர் தொடங்கும் ஆண்டாக இருக்கலாம் என கணித்துள்ளதால் அது அப்படியே நடக்கிறதா என பலரும் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!



Click it and Unblock the Notifications