அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் புதிய அமைதிப் படை திட்டத்தை தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்க அறிவியல் மற்றும் கணித பட்டதாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கு அமெரிக்க தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் ஒரு சிறப்பு குழுவாகும்.
இத்திட்டத்தின் அடிப்படையே டெக் துறையில் சீனாவின் போட்டியை குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 'டெக்னாலஜி ப்ராஸ்பெரிட்டி கார்ப்ஸ்' (Technology Prosperity Corps) என்று பெயரிடப்பட்ட இத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 அமெரிக்க தன்னார்வலர்கள் மற்றும் ஆலோசகர்களை அமைதிப் படை கூட்டணி நாடுகளுக்கு அனுப்ப உள்ளது அமெரிக்கா.

இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்க ஏஐ வன்பொருள் மற்றும் மென்பொருளை ஊக்குவிக்கவும், சீனாவின் தொழில்நுட்பத்தை தவிர்க்கவும் முயலும். ஏஐ துறையில் அமெரிக்காவுக்கு இணையாக தற்போது சீனாவும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்த நிலையில் உலகின் பல நாடுகளில் தற்போது அமெரிக்க பிராடெக்ட்களை பயன்படுத்தாமல் சீன ப்ராடெக்ட்களை பயன்படுத்த துவங்கியுள்ளது.
அமெரிக்காவின் பலமே தொழில்நுட்ப துறை தான், தற்போது இதில் சீனா மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்திருக்கும் வேளையில் அமெரிக்கா தனது எதிர்காலம் குறித்து அஞ்சி வருகிறது. இந்த நிலையில் டெக் துறையில் உலகளவில் அமெரிக்கா முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த முயற்சியின் கீழ் இதுவரையில் அமெரிக்காவின் ஏஐ சிப்-களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் பல கட்டுப்பாடுகளை விதித்து வந்த டிரம்ப் அரசு, தற்போது என்விடியா போன்ற முன்னணி நிறுவனங்களின் மேம்பட்ட சிப்களை ஏற்றுமதி செய்யும் முயற்சிகளை அதிகரித்துள்ளது. இந்த புதிய அமைதிப் படை அமெரிக்காவின் 60 ஆண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அமைதிப் படைக்கு புதிய நோக்கத்தை அளித்துள்ளது என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
1961ஆம் ஆண்டு அப்போதைய அதிபராக இருந்த ஜான் எப்.கென்னடி முதல் முறையாக Peace Corps-ஐ உருவாக்கினார். இந்த குழு உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் நடப்புறவை மேம்படுத்தும் பணிகளை செய்தது.
வெள்ளிக்கிழமை இந்தியா ஏஐ இம்பேக்ட் சம்மிட்டில் வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை இயக்குநர் மைக்கேல் கிராட்சியோஸ் இத்திட்டத்தை அறிவிக்க உள்ளார். இது சீனாவின் தொழில்நுட்ப விரிவாக்கத்தையும், வளர்ச்சியையும் எதிர்க்கும் முயற்சியாகும்.
சீனா தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகளில் சாலைகள், மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புகளை வழங்கி தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கிறது. இதற்கு எதிராக அமெரிக்கா ஏஐ தொழில்நுட்பத்தை முன்னிறுத்துகிறது.


Click it and Unblock the Notifications