டிரம்ப் அறிவிப்பால் கதிகலங்கிய 2 துறைகள்.. 200 சதவீதம் வரி.. ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் USA..!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து தினமும் ஒரு அதிரடி என்ற வகையில் ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்க மக்களையும், உலக நாடுகளையும் கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறார் டிரம்ப். இந்த நிவையில் சர்வதேச வர்த்தகத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் புதிய வரி அறிவிப்புகளை விதிக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப் முதல் முக்கிய அறிவிப்பாக விரைவில் பிரிக்ஸ் நாடுகள் மீது 10 சதவீதம் கூடுதல் வரியை விதிக்க உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அறிவிப்போடு இன்னும் சில அறிவிப்புகளையும் டிரம்ப் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியபோது அறிவித்தார்.

டிரம்ப் அறிவிப்பால் கதிகலங்கிய 2 துறைகள்.. 200 சதவீதம் வரி.. ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் USA..!

காப்பர் இறக்குமதிகளுக்கு 50% வரி:
செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் செம்பு அதாவது காப்பர் இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கும் உத்தரவில் இந்த வாரம் கையெழுத்திடவுள்ளதாக அறிவித்தார். இந்த வரி மூலம், ஏற்கனவே அமெரிக்க அரசு அறிவித்த ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 25% வரி விதிப்பில் தற்போது காப்பர் உலோகமும் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய 50 சதவீத வரி விதிப்பு மூலம் அமெரிக்க உற்பத்தித் தொழிற்சாலைகளை பாதுகாக்க முடியும். காப்பர் உலோகம் எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானம் மற்றும் எனர்ஜி துறைகளில் முக்கியமான மூலப்பொருளாக உள்ளது. மேலும் இந்த வரி, அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று டிரம்ப் தீவிரமாக நம்புகிறார்.

இருப்பினும், இந்த வரி உயர்வு அமெரிக்காவில் காப்பர் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவை அதிகரிக்கும். இந்த செலவு உயர்வு இறுதியில் மக்கள் வாங்கும் பொருட்களின் விலையை உயர்த்தும் என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த 50 சதவீத வரி என்பது உலகளாவிய காப்பர் விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருந்து இறக்குமதிகளுக்கு 200% வரி:
டிரம்பின் ஜூன் 8ஆம் தேதி அமைச்சரவையில் பேசுகையில், வர்த்தகக் கொள்கையின் மற்றொரு முக்கிய அறிவிப்பாக, வெளிநாட்டில் இருந்து அமெரிக்க மண்ணில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 200% வரையிலான கடுமையான வரி விதிக்க உள்ளதாக அறிவித்தார். இந்த வரி உடனடியாக அமலுக்கு வராது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மருந்து நிறுவனங்களுக்கு தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கு 18 மாத கால அவகாசம் வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். இதுக்குறித்து அவர் பேசுகையில் "நாங்கள் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடம் கால அவகாசம் கொடுப்போம், அதன் பிறகு பார்மா இறக்குமதி மீது மிக உயர்ந்த வரியை விதிப்போம்," என்று டிரம்ப் அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார்.

இந்த முடிவு, அமெரிக்காவில் மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், தற்காலிகமாக மருந்து விலைகளை உயர்த்தி, நுகர்வோருக்கு சுமையை அதிகரிக்கலாம். மருந்து துறையில் இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் அமெரிக்க சந்தை, இந்த வரி உயர்வால் அதிகம் பாதிக்கப்படும்.

உற்பத்தித் துறையில் வேலை இழப்பு:
டிரம்பின் பதவிக் காலத்தில், அமெரிக்க உற்பத்தித் துறையில் வேலை இழப்பு ஒரு முக்கிய சவாலாக உள்ளது. உலகளாவிய போட்டி மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக, அமெரிக்க உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இந்தப் போக்கை மாற்றுவதற்காகவே டிரம்ப், காப்பர், ஸ்டீல், அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் இறக்குமதிகளுக்கு வரிகளை விதித்து வருகிறார்.

இந்த வரிகள் உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கும் என்று தீவிரமாக நம்புகிறார், ஆனால் இந்த நடவடிக்கைகள் உற்பத்தி செலவை உயர்த்தி, இறுதியில் வேலைவாய்ப்புகளை பாதிக்கலாம்.

உதாரணமாக, காப்பர் மீதான இறக்குமதி வரி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தாலும், இறக்குமதியை நம்பியிருக்கும் தொழிற்சாலைகளுக்கு சுமையை அதிகரிக்கலாம், இது மறைமுகமாக வேலை இழப்புக்கு வழிவகுக்கலாம்.

14 வெளிநாட்டு தலைவர்களுக்கு எச்சரிக்கை:
டிரம்ப் ஏற்கனவே அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாட்டு பொருட்களுக்கும் 10% அடிப்படை வரியை ஏற்கனவே விதித்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா இதுவரையில் பிரிட்டன், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில் டிரம்ப் நேற்று 14 நாட்டு தலைவர்களுக்கு வரி விதிப்பு குறித்த எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியுள்ளார். இதில் சில நாடுகளுக்கு 70% வரையிலான வரி விதிக்கப்படலாம் என தெரிகிறது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை குறிவைத்து, தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் கஜகஸ்தானுக்கு 25%, தென் ஆப்பிரிக்காவுக்கு 30%, இந்தோனேசியாவுக்கு 32%, வங்கதேசத்திற்கு 35%, மற்றும் தாய்லாந்திற்கு 36% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிகளின் அமலாக்கம், முன்னர் அறிவிக்கப்பட்ட ஜூலை 9, 2025 தேதியிலிருந்து ஆகஸ்ட் 1, 2025 ஆக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 3 வாரத்திற்குள் இந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தாக வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+