அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா மீது தொடர்ந்து கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறார். ஏற்கனவே 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற மாபெரும் தடையை உருவாக்கியிருக்கும் வேளையில் அடித்தக்கட்ட கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
இன்று (செப்டம்பர் 23) டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, H-1B விசா தேர்வு செயல்முறையில் பெரும் மாற்றம் செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியான அறிவிப்பில் ஹெச்1பி விசா அளிக்கப்படும் விண்ணப்பத்தை தேர்வு செய்யும் தற்போதைய லாட்டரி முறையை மொத்தமாக கைவிட்டு, திறமை மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் விசாக்களை விநியோகிக்கும் புதிய தேர்வு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம், அமெரிக்க தொழில்நுட்பத் துறையை அதிகம் சார்ந்துள்ள H-1B திட்டத்தின் மிக முக்கியமான சீர்திருத்தமாகக் பார்க்கப்படுகிறது.

H-1B விசா தேர்வு முறையில் புதிய மாற்றம்
H-1B விசா திட்டம், அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து திறமையான தொழிலாளர்களை ஈர்க்க உதவும் ஒரு முக்கியமான கருவி, ஆனால் ஆண்டுக்கு 85,000 விசாக்களுக்கான விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதால் லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படுகிறது.
இந்த புதிய தேர்வு முறை மூலம், விண்ணப்பங்கள் எண்ணிக்கை 85,000-ஐ தாண்டும் போது, அதிகப்படியான ஊதியம் செலுத்தும் நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு அதிக மதிப்பளிக்கும் வகையில் தேர்வு முறை மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதீத திறமை கொண்டவர்கள் மற்றும் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுநே முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த மாற்றம், அமெரிக்க குடியேற்ற சேவைகள் (USCIS) மூலம் அமல்படுத்தப்படும் என்று பெடரல் ரெஜிஸ்டர் அறிவிப்பு தெரிவிக்கிறது. இது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறப்போகிறது.
டிரம்ப் அதிரடி நடவடிக்கை
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து டிரம்ப், குடியேற்ற விதிமுறைகளை சீர்திருத்தம் செய்வதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதல்கட்டமாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மக்களை வெளியேற்றும் கட்டுப்பாடுகளை விதித்த டிரம்ப் அரசு, அடுத்தக்கட்டமாக சட்டரப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் வருபவர்கள் அந்நாட்டு குடிமக்களின் நலனை பாதுக்காகும் முயற்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியர்களை அதிகம் பாதிக்கம் அமைந்துள்ளது வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications